Tuesday, 30 September 2014

மூல நோய்கள் நீங்க - பாட்டி வைத்தியம்:-

மூல நோய்கள் நீங்க


முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, இரத்த மூலம் போன்றவை சரியாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.
Read more »

Monday, 29 September 2014

உணவு உண்ணும் முறையினை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

உணவு உண்ணும் முறை

சர்க்கரை வியாதி உடையவர்கள் வயிறு நிறையும் அளவில் உண்ணாமல் மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளைகளில் உண்ணலாம். தினமும் குறித்த நேரத்தில் உண்ணவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் உண்ணக்கூடாது.உண்ணும்போது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், படித்துக் கொண்டும் உண்ணக்கூடாது.
Read more »

வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்

வயிற்றுப்புண்


அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.
Read more »

முகத்திற்கு வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!

வெள்ளரிக்காய் மாஸ்க்

அழகை அதிகரிக்க பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல், ஃபேஸ் பேக் என்று பலவற்றை செய்து வருவோம். அப்படி ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிக்க ஆரம்பித்தால், அதனை வாழ்நாள் முழுவதும் சீரான இடைவெளியில் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால், சருமமானது சுருக்கத்துடன், சோர்வாக, பொலிவிழந்து காணப்பட ஆரம்பிக்கும்.
Read more »

Sunday, 28 September 2014

இயற்கையான முறையில் உடல் சூட்டை தணிக்க வழிமுறைகள்


சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்பார்கள்.

உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு!
Read more »

Saturday, 27 September 2014

சாத்துக்குடி ஜூஸின் மூலம் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!

சாத்துக்குடி ஜூஸின் மூலம் கூந்தலுக்கு

சாத்துக்குடி ஜூஸானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. முக்கியமாக இதனை எனர்ஜியை அதிகரிக்கும் பானம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஜூஸில் கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது.
Read more »

மூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!

மூல நோயை விரட்ட இளநீர்

ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க.... ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா... மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.
Read more »

Friday, 26 September 2014

கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்...!

கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

கண்ணாடி அணிந்தாலே தங்கள் அழகு போய்விடும் என்று பெண்கள் கவலைப்படுவார்கள்.
கணனியில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Read more »

லிப்ஸ்டிக் போடுவது எப்படி!

லிப்ஸ்டிக் போடுவது எப்படி

லிப்ஸ்டிக் போடுவது உதடுகளில் எழுதும் கவிதை போன்றது. அதை ரசித்துச் செய்ய வேண்டும். இப்படி...!

* முதலில் கவனிக்க வேடியது லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றைத்தான். லிப்ஸ்டிக் குச்சி உங்கள் உதடுகளுக்கு ஏற்ப குவிந்தோ, உருண்டை வடிவமாகவோ இருக்க வேண்டும். அது லிப்ஸ்டிக் பூச வசதியாகவும், சாயம் எல்லா இடங்களிலும் பரவ வசதி யாகவும் இருக்கும்.
Read more »

Thursday, 25 September 2014

மூட்டு வலி சம்பந்தமான கேள்விகளும் பதில்களும்

மூட்டு வலி

மூட்டில் ஏற்படும் பிரச்னைகள் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றிய கேள்விகளுக்கு ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின்  மருத்துவரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிளமெண்ட் ஜோசப் பதிலளிக்கிறார்.
Read more »

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் .........


இளநீர், சிறுநீர்ப் பாதையில் உள்ள அழற்சியைக் குறைத்துச் சிறுநீரைக் கலங்கலும், சூடுமின்றி நிறைய வெளியேற்றும்.
Read more »

அழகுக்கு ஆபத்தின்றி உடல் எடையை குறைக்க வழிகள்

அழகுக்கு ஆபத்தின்றி உடல் எடையை

பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள்.
எப்படியாவது தங்கள் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை பட்டினி. தொடர்ந்து பட்டினி கிடக்கும்போது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது.
Read more »

Wednesday, 24 September 2014

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுமுறைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுமுறைகள்

நீரிழிவு தொல்லை தரும் நோய்களில் ஒன்று முற்றிலும் குணப்படுத்த முடியாத வியாதியான நீரிழிவை கட்டுப் பாட்டில் வைக்க முடியும். அதற்கு முக்கிய தேவைகள் மருந்துகள் மற்றும் உணவு, நீரிழிவிற்கு மருந்துகள் எவ் வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு. அதுவும் பத்திய உணவு
Read more »

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்

சர்க்கரை நோயை

இன்று நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி மிகவும் பொதுவான ஒன்றாகிவிட்டது. கீழ்க்கண்ட சில விஷயங்களைப் பின் பற்றினால் சர்க்கரை நோய் உங்களை நெருங்காமல் செய்யலாம்...

குடும்பத்தில் சர்க்கரை நோய் இல்லாதவருக்கும் சர்க்கரை நோய் உள்ளது. அவர்களை ஆராய்ந்த போது, அதிக உணவு, உடல் உழைப்பு இல்லாமை, அதிகமான டென்சன் போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதை டாக்டர்கள் கண்டறிந்தனர். இது சைவ உணவு உண்பவர்களுக்கும் பொருந்தும்.
Read more »

Tuesday, 23 September 2014

தலை முதல் கால் வரை அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.
Read more »

ப்ளீடிங்... எது நார்மல்?

மாதவிலக்கு

ஒரு பெண்ணுக்கு ஒரே நாளில் ஆகும் ரத்தப்போக்கு வேறு சில பெண்களுக்கு மாத விலக்கு நாட்கள் முழுவதும் வெளியேறும் ரத்தப்போக்காக இருக்கலாம். ரத்தப்போக்கானது 3 நாட்கள் முதல்  10 நாட்கள் வரை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். மாதவிலக்கின் போது ஏற்படும் ரத்தப் போக்கு எல்லாம் முழுவதுமே ரத்தம் அல்ல. அதில் பாதி அளவே ரத்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் சரியான அளவு ரத்த இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிடுவது கடினம். மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பின் சராசரி அளவு 30-40 மி.லி.
Read more »

Sunday, 21 September 2014

குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா?

குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா

வாழ்க்கை முறையை எளிமைப்படுத்துவதற்கு மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது குளிர்சாதன பெட்டி. வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது திருமணமாகாத ஆணாக இருந்தாலும் சரி - அனைவருக்கும் குளிர்சாதன பெட்டி தேவைப்படும். அதற்கு ஒரே காரணம் உணவுகளை சேகரித்து அதனை பின்னர் பயன்படுத்துவதற்கே. ஆனால் எத்தனை நாட்களுக்கு உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்? குளிரூட்டப்பட்ட உணவு ஆரோக்கியமானதா? இது நீண்ட காலமாக நடந்து வரும் விவாதமாகும்.
Read more »

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெறும் வயிற்றில் தண்ணீர்  குடிப்பதால்

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.
Read more »

அழகான மென்மையான உதடுகளைப் பெற சில டிப்ஸ்...

உதடு

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் உதடுகளுக்கும் முக்கிய பங்குண்டு. உதடுகள் நன்கு அழகாக இருந்தால், தானாக முகத்தின் அழகும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் தற்போது பலருக்கு உதடுகள் பொலிவிழந்து, அடிக்கடி வறட்சியாகிறது. இப்படி உதடுகள் வறட்சியாவதற்கு காலநிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன.
Read more »

Saturday, 20 September 2014

வயிற்றுப்புண் பற்றிய கேள்விகளும் பதில்களும்

வயிற்றுப்புண்

கேள்வி:- வயிற்றுப்புண் என்றால் என்ன டாக்டர்?

பதில்:-  வயிற்றுப் புண் என்றால் இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புண் ஆகும். வயிற்றுப் புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படும்
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயம் குடற் புண் (Peptic ulcer) எனப்படுகிறது.
Read more »

இரத்த அழுத்த நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

இரத்த அழுத்த நோயாளிகள்

இன்று மனிதர்களை பல வகையான நோய்கள் தாக்குகின்றன. இவற்றில் இரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் முதன்மை வகிக்கிறது. இவ்விரு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்கள்.
Read more »

உடம்பில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்கவேண்டும்...


கொழுப்பின் அளவு:

மொத்த கொழுப்பின் அளவு(Total Cholesterol) 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும் பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும். உயர் அடர்வு கொழுப்பு(HDL) 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.
Read more »

Thursday, 18 September 2014

கறுப்பாக இருக்கும் பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்..

கறுப்பாக இருக்கும் பெண்களுக்கான

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே.

Read more »

பெண்கள் கொலுசு அணிவதால் கிடைக்கும் நன்மைகள் .....

 கொலுசு

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
Read more »

எந்த வயதில் என்னென்ன உடல் பரிசோதனை செய்யலாம்?

உடல் பரிசோதனை

உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன.
Read more »

Wednesday, 17 September 2014

உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சில டிப்ஸ்

கொழுப்பை குறைக்க

என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம்.
Read more »

கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…


தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று கால் பாதங்களில் அதாவது கணுக்காலில் வலி ஏற்படுகின்றது. இந்த கணுக்கால் வலி ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும். கணுக்கால் வலியானது 35 வயது முதல் ஆரம்பிக்கத் தொடங்கும். உடற்கூறுகளின் தன்மையைப் பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும்.
Read more »

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்!!!

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை

அழுக்குகளானது சருமத்தில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் சுருக்கங்கள் விழும் பகுதியில் தான் அழுக்குகள் அதிகம் சேரும். அதில் குறிப்பாக கழுத்து, மூட்டுகள், அக்குள் மற்றும் பல கண்ணுக்கு தெரியாத பகுதிகளில் அதிகம் சேரும். அழுக்குகள் சரியாக போகாமல் இருந்தால், அவ்விடங்கள் கருமையாக மாற ஆரம்பிக்கும்.
Read more »

Tuesday, 16 September 2014

எந்த அறிகுறியும் இன்றி எந்த சூழலில், யாரை, ஹார்ட் அட்டாக் தாக்கும்?

ஹார்ட் அட்டாக்

- ரத்த அழுத்தம் 130/80 என்ற சராசரி நிலைக்கு மேல் இருந்தால்
Read more »

கர்ப்பிணிகளுக்கு கைகொடுக்கும் மருத்துவ ஆலோசனைகள்

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்ப காலத்தில், பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் அதிகம். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பின்பற்றினால், பிரசவம் சுகமாக அமையும்.
அந்த ஆலோசனைகளில் மிக முக்கியமான சில:
Read more »

Monday, 15 September 2014

உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது தெரியுமா?


சாப்பிடும் போது தட்டின் அருகில் ஒரு நீள சொம்பில் தண்ணீர் வைத்திருப்பதை நாம் தினந்தோறும் காணக்கூடிய ஒரு காட்சியாகும். உணவருந்தும் போது ஒரு டம்ளர் தண்ணீர், குறிப்பாக குளிர்ந்த நீரை தன்னருகில் வைத்துக் கொள்ள பலரும் விரும்புவார்கள். ஆனால் இந்த பழக்கம் உங்கள் உடல்நலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
Read more »

வெள்ளையான சருமம் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க...

வெள்ளையான சருமம்

ஒரு மாலுக்கு சென்றாலும் சரி அல்லது ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றாலும் சரி... அழகு சாதனப் பொருட்கள் இருக்கும் பகுதியை விட்டு நம் பெண்கள் அவ்வளவு விரைவாக நகர்வதே இல்லை. எத்தனை வகையான பொருட்கள், எந்த கம்பெனி தயாரிப்புகள், எவ்வளவு விலை என்று அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
Read more »

Sunday, 14 September 2014

சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்து பாகற்காய்

சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்து பாகற்காய்

ஒரு கொடியை தூக்க தூக்க ஒரு ஆயிரம் பாகற்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாக காய்க்கக்கூடியது பாகற்காய். இலைமறைவு காய்மறைவு என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும் வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும்(பச்சையாக) இருந்து காயை காப்பாற்றும் சட்டென்று பார்த்தால் காய் இருப்பது தெரியாது. கொடியை தூக்கி பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.
Read more »

ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ்


நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர்.
Read more »

Friday, 12 September 2014

ஸ்கேன் ஏன்? எதற்கு?

ஸ்கேன்

‘இந்த டாக்டருங்களுக்கு பணம் பிடுங்கறதே வேலையாப் போச்சு... சாதாரண பிரச்னைக்குக் கூட ஆயிரத்தெட்டு டெஸ்ட் எடுக்கச் சொல்றாங்க...  ஸ்கேன் பண்ணச் சொல்றாங்க... ரிசல்ட்டுல பிரச்னை இருக்காதுனு தெரியறபோது எவ்ளோ கோபம் வருது தெரியுமா? பணமும் நேரமும்தான்  வேஸ்ட்...’’ என்கிற புலம்பல்களை நீங்களும் கேட்டிருக்கலாம்... நீங்களே இப்படிப் புலம்பியும் இருக்கலாம்.
Read more »

தோள்பட்டை வலிக்கு தீர்வு என்ன?

தோள்பட்டை வலி

மனிதனின் உடல் அமைப்பில் வலிமையின் அடையாளமாக இருப்பது தோள்கள். மனிதனின் அதிக எடை தாங்கும் பகுதி தோள்பட்டை தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. எந்தச்சுமையும் சுமக்கும் சுமைதாங்கி தோள்பட்டை ஆகும். தோள்களின் இயக்கத்தில் முதலில் பாதிப்பது கைகள்தான். தோள்பட்டை வலி, எலும்பு முறிவு போன்றவை முன்பெல்லாம் கவலைக்கும் பீதிக்கும் உரியவையாக இருந்தன. இப்போது நவீன மருத்துவ முன்னேற்றத்தால் எவ்வித தோள் பிரச்னைகளுக்கும் சிகிச்சை உள்ளன. தோள்பட்டை வலி யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.
Read more »

மயக்கம் வருவது போல இருக்கா?

மயக்கம்

உடலில் போதிய அளவு சத்துக்கள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மயக்கம் வருவது போல் இருக்கும். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த உணர்வு அதிகம் ஏற்படும். அதிலும் அவ்வாறு மயக்கம் தெருக்களில் நடந்து செல்லும் போது, காரை ஓட்டும் போது என்ற நேரத்தில் தான் வரும். ஆகவே அவ்வாறு மயக்கம் வருவது போல் இருந்தால், அந்த நேரத்தில் என்னவெல்லம் செய்தால், மயக்க நிலை போகும் என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு, பின்பற்றுங்களேன்...
Read more »

Thursday, 11 September 2014

தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள்

தைராய்டு

தைராய்டு சுரப்பி சிறியதாக இருந்தாலும் இதன் வேலைகள் மிக அதிகம். பட்டாம்பூச்சு வடிவம் கொண்ட இந்த சுரப்பி 2-3 அங்குலம் அளவானது. ஒரு அவுன்ஸ் எடையுடையது. கழுத்தில் உள்ள இது மூச்சு குழலின் இருபுறமுமாக அமைந்து இருக்கிறது.
Read more »

முகப்பருக்கள் வருவதற்கான காரணங்கள்!!!

முகப்பரு

தற்போது பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். சரி பருக்கள் வந்தால் அனைவரும் என்ன செய்வோம்? அதனை சரிசெய்ய என்ன வழி என்று யோசித்து, அதனை சரிசெய்ய முயற்சிப்போம்.
Read more »

Wednesday, 10 September 2014

குடலிறக்கம் நோய்க்கான 8 முக்கிய காரணிகள்!!

குடலிறக்கம்

ஹெர்னியா என்றால் உண்மையில் என்னவென்று நம்மில் பலருக்குத் தெரியாது. மேலும் திசுக்களின் அளவுக்கு அதிகமான வளர்ச்சி அல்லது கொழுப்பு என்றே நம்மில் பலர் கருதுகின்றனர். எனினும் மருத்துவர்கள் கூற்றுப்படி, உடலின் வெளிப்புற சுவர்களை நோக்கி உடல் உள்ளுறுப்புகள் புடைப்பதன் காரணமாகவே ஹெர்னியா உருவாகிறது.
Read more »

தலைமுடி பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்க வழிமுறைகள்



எச்சரிக்கை! சூரிய கதிர்கள் நேரடியாக கூந்தலில் படும் போதும் கூந்தல் பழுப்பு நிறத்திற்கு மாற வாய்ப்புண்டு. ஏனெனில் சூரிய கதிர்கள் கேசத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில் முதன்மையானவையாகும். ஆகவே வெளியே செல்லும் போது, கூந்தலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
Read more »

பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகள்

பிரசவ வலி

பெண்களுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போல. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
Read more »

உடல் எடையை விரைவாக குறைக்க முற்படும்போது ஏற்படும் எதிர்விளைவுகள்.....

உடல் எடையை விரைவாக

தற்போது உடல் எடையால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆகவே அனைவரும் விரைவில் எடையை குறைக்க விரும்புகிறார்கள். அதிலும் பண்டிகை காலத்தில் விருந்து பலகாரம் சாப்பிட்டு, எடை கூடிய பிறகு, புத்தாண்டில் எடையை குறைக்க தீர்மானம் செய்வார்கள். அப்போது 30 நாட்களில் எடையை குறையுங்கள்' என்கிற விளம்பர சுவரொட்டி கவனத்தை ஈர்க்கும்.
Read more »

Tuesday, 9 September 2014

இது ருசிக்காக சாப்பிடும் மனிதர்களுக்கான பதிவு!

ருசிக்காக சாப்பிடும்

மனிதன் பசிக்குச் சாப்பிட்டு வந்த காலம் போய் ருசிக்குச் சாப்பிடத் துவங்கினான். ருசி அவனை அளவுக்கதிகமாகச் சாப்பிட வைத்து நோய் எனும் பெரும்பள்ளத்தில் கொண்டு போய் விழ வைத்து விட்டது. அவ்வப்போது சில மருத்துவங்களின் உதவியால் பள்ளத்திலிருந்து எழுந்து நிற்க முடிகிறதே தவிர, அந்தப் பள்ளத்திலிருந்து முழுமையாக எழுந்திருக்கமுடியாமல்அதற்குள்ளேயே அவதிப்பட்டு மனமுடைந்து போகிறான், மனநிம்மதியையும் இழக்கிறான்.
Read more »

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுக்கான கை வைத்தியங்கள்!!!



ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய். இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும் இதர நிலைகளான கர்ப்ப காலம், வைட்டமின் பற்றாக்குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், லுக்கேமியா என்றழைக்கப்படும் வெள்ளையணு புற்றுநோய், அல்லது இதர நோய்த்தொற்றின் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.
Read more »

Monday, 8 September 2014

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?

சர்க்கரை

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
Read more »

உடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்!

உடற் பருமனைக் குறைக்க


நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..
Read more »

விட்டு விட்டு இருமலா...நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கும்

விட்டு விட்டு இருமலா

பெண்கள் சமைக்கும்போது சமையல் நெடி காரணமாக இருமுவார்கள். அது இருமலல்ல. சிலர் காலையில், மதியத்தில், மாலையில் என ஒரு சில தடவை இருமுவார்கள். அது பழக்கத்தின் காரணமாக வருவது. அது இருமலல்ல. நாள் முழுவதும் விட்டு விட்டு இருமுவார்கள். அது இருமலாகும். சில நாட்கள் இருமியவர்களுக்கு அது பழக்கமாகி வழக்கமாகி விடும். சில மாதங்களாக இருமிக்கொண்டு இருப்பார்கள். அதை தொந்தரவாக கருதாமல் இயல்பாக எடுத்து கொள்வார்கள். அது ஆபத்தானது.
Read more »

தலை முடி கொட்டுவது ஏன்? கூந்தலை வளர்ப்பது எப்படி?

தலை முடி கொட்டுவது ஏன்

முடி கொட்டுதல் ஏன்?.

1.    நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும்.
2.    அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
Read more »

Sunday, 7 September 2014

ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்


ஆரஞ்சு பழங்களின் அழகு டிப்ஸ்
ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ”ப்ளிச்” ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
Read more »