Tuesday, 29 April 2014
தூக்கமின்மை ?கவலை வேண்டாம்!
தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.
Read more »
பல்வலியை போக்கும் இயற்கை மருந்து பொருட்கள்
பல்வலி |
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
Read more »
Monday, 28 April 2014
புரோக்கோளி சாப்பிட மறந்துடாதிங்க
புரோக்கோளி |
இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,
Read more »
பல நோய்களுக்கு காரணமாகும் மலச்சிக்கல்
மலச்சிக்கல் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. இதை ஒரு நோய் என்று கருத முடியாது. எனினும் பலர் இந்த மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்.
Read more »
மயக்கம் வந்தால் உடனடிச் சிகிச்சை முறைகள்
மூளையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாதபோது மயக்கம் உண்டாகும். பயப்படுவதாலும், கெட்ட செய்தியைக் கேட்பதாலும், திடீர் தாக்குதல், விபத்தாலும், பயங்கரமான காட்சியைக் காண்பதாலும், வியாதிகளாலும், களைப்பு, உஷ்ணத்தினாலும், நீண்ட நேரம் நிற்பதினாலும் மயக்கம் ஏற்படும்.
Sunday, 27 April 2014
அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்
அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்…
வயசுல பெரியவங்களா இருப்பாங்க…. சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
Read more »
கிட்னி கல் என்றால் என்ன? யாருக்கு வரும்?
கிட்னி கல் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
Read more »
மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா?
அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா?
மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?
தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.
Read more »
இள நரையைப் போக்க வேண்டுமா?
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது.
Read more »
Saturday, 26 April 2014
கழுத்து வலியும் டிஸ்க் விலகலும்
கழுத்து வலியும் டிஸ்க் விலகலும் |
கழுத்து வலி :
கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை முறை, பைக், கார் போன்றவற்றில் மோசமான ரோட்டில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கம்ப்யூட்டர் டைப் செய்வது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, டிவி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலகீனமடைந்து வலி ஏற்படுகிறது.
Read more »
முகப்பரு வராமல் தடுக்க...
முகப்பரு வராமல் தடுக்க... |
துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.
Read more »
அலர்ஜி என்கிற ஒவ்வாமை
அலர்ஜி |
அலர்ஜி என்கிற ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உ ணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜிபிரச்சினையே இல்லை . பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.
Read more »
Friday, 25 April 2014
சர்க்கரை நோயாளிகள் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய சில மருத்துவ பரிசோதனைகளை பற்றி இங்கு காண்போம்.
1) மாதத்திற்கு ஒரு முறை:-
Read more »
வெயிலால் ஏற்படும் கை கருமையை போக்க வழிகள்
கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலானது எப்பேற்பட்டவர்களையும் கருப்பாக மாற்றிவிடும். அப்படி கருப்பாக மாறும் இடங்களில் முகம் மற்றும் கை தான் முக்கியமானவை. இவற்றில் தினமும் முகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிப்போம். ஆனால் கைகளை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். இதனால் தான் உடலில் கைகள் மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும்.
Read more »
யாருக்கு தேவை எண்டோஸ்கோபி பரிசோதனை
எண்டோஸ்கோபி |
கொலொனோஸ்கோபி கருவி மூலம் பரிசோதனை மட்டும் செய்யலாமா? அல்லது சிகிச்சையும் மேற்கொள்ளலாமா?
கொலொனோஸ்கோபி மூலமாக பெருங்குடலில் உள்ள கட்டியை புற்றுநோய் கட்டிதானா என்று கண்டறிய பரிசோதனைக்கு மாதிரி எடுக்க பயன்படுகிறது. மேலும் பெருங்குடல் பகுதியில் ஏதேனும் சதைக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதை உடனே நீக்கவும் செய்யலாம். இது தவிர கொலொனோஸ்கோபி மூலம் ரத்தப்போக்கு இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தால் இதன் மூலமாகவே மருந்தினை உட்செலுத்தியோ அல்லது க்ளிப் பொருத்தியோ ரத்தப்போக்கு கட்டப்படுத்தப்படுகிறது.
Read more »
Thursday, 24 April 2014
தொப்பை குறைய எளிய வழிகள்
தொப்பை குறைய எளிய வழிகள் |
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.
Read more »
தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்
தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள் |
அமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்..
மேலும் இந்நோயில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தைராய்டு புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்த முடியும் என்றாலும் அதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை பார்க்கலாம்.
Read more »
கண் இமைகளுக்கான அழகு குறிப்புக்கள்
கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலானது எப்பேற்பட்டவர்களையும் கருப்பாக மாற்றிவிடும். அப்படி கருப்பாக மாறும் இடங்களில் முகம் மற்றும் கை தான் முக்கியமானவை. இவற்றில் தினமும் முகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிப்போம். ஆனால் கைகளை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். இதனால் தான் உடலில் கைகள் மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும்.
Read more »
மருந்து மாத்திரை வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை
மருந்து மாத்திரைகளை வாங்கும் போது முதலில் நிதானத்துடன் செயல்படவேண்டும் ஒரு போதும் அவசரம் காட்டக்கூடாது பொருமையுடன் வாங்கவேண்டும்.. மருந்துகளை வாங்கும் போது உரிமம் பெற்ற சில்லறை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.
Read more »
Wednesday, 23 April 2014
மசாஜ் செய்வதால் என்ன பயன்?
இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போம்.
Read more »
சர்க்கரை நோயாளிக்கு புழுங்கல் அரிசி
தமிழ்நாட்டில் காலம் காலமாக தமிழர்கள் 2 வகை அரிசி சாப்பிட்டு வருகிறார்கள். பச்சரிசி, புழுங்க அரிசி என்ற அந்த இரண்டுக்கும் தனித்தனி சிறப்புத் தன்மைகள் உண்டு. தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தவர்கள்.
Read more »
Tuesday, 22 April 2014
ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?
சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன்.
ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?
பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி
Read more »
பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தலாமா?
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும்.
புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!
Read more »
மாரடைப்பு வந்தால் ஆபரேஷன் தான் தீர்வா?
மாரடைப்பு வந்து விட்டால், அறுவைச் சிகிச்சை தான் தீர்வு என்பது, சரியான நடைமுறை அல்ல. மருந்து, மாத்திரைகளால், 80 சதவீதம் குணப்படுத்தி விட முடியும். இதய வால்வை மாற்றினாலும், திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். வாழ்நாள் முழுவதும், மாத்திரை சாப்பிட வேண்டிய நிலையும் வராது.
Read more »
Monday, 21 April 2014
முதுகில் மயக்க ஊசி போடுவதால் முதுகு வலி வருமா?
சிசேரியன் உள்ளிட்ட பல பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு முதுகில் மயக்க ஊசி போடுவது காலங்காலமாக இருந்து வருகிற பழக்கம். அப்படிப் போடப்படுகிற ஊசியால் முதுகுவலி வருவதாக ஒரு அபிப்ராயமும் மக்களிடையே உண்டு.
Read more »
எடைக் குறைப்புக்கு உதவுமா புரோட்டீன் பவுடர்?
செய்தித்தாளைத் திறந்தால் உள்ளே புரோட்டீன் பவுடர் உபயோகிக்கச் சொல்கிற விளம்பர நோட்டீஸ்… ‘சிரமமின்றி எடை குறைய வேண்டுமா? புரோட்டீன் பவுடர் குடியுங்கள்’ என அழைக்கின்றன பேருந்து மற்றும் ஆட்டோ விளம்பரங்கள். போன மாதம் வரை உடல் பருமனுக்கு உதாரண உருவமாக இருந்த தோழியோ, உறவினரோ, திடீரென அடையாளம் தெரியாத அளவுக்கு இளைக்கிறார். ‘புரோட்டீன் பவுடர்தான் ரகசியம்’ என்கிறார். அதையே உங்களுக்கும் பரிந்துரைக்கிறார். ‘
Read more »
Sunday, 20 April 2014
புற்றுநோயை தடுக்கும் காலிஃப்ளவர்
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.
Read more »
சர்க்கரை நோயாளிகள் மைதா உணவுகளை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகளுக்கு மைதா மாவு கூடாது என்கிறார்களே, ஏன்?
மைதா மாவு, கோதுமையில் இருந்து பெறப்படுகிறது. கோதுமையில் உள்ள நார்ச்சத்து முழுவதும், இயந்திரத்தால் நீக்கப்பட்டு, மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதனால், மைதா உணவு வகைகளை சாப்பிட்ட உடன், மிகவேகமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்கிறது. இந்த வேகத்திற்கு, "இன்சுலின்’ ஊசியோ அல்லது மாத்திரையோ ஈடுகொடுக்க முடிவதில்லை. மைதா வகைகளை தவிர்ப்பது நல்லது. மைதாவில் உள்ள "மைக்ரோகிராம்’ அளவு, கெமிக்கல் சர்க்கரை வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
Read more »
குண்டு குழந்தைகளா… உஷார்!
”உடலுக்கு உணவு என்கிற வரவு மட்டும் போதாது. உடற்பயிற்சி என்கிற செலவும் இருந்தால் தான் ஆரோக்கியம். இல்லாவிட்டால் குழந்தைகள் குண்டாகிவிடுவர்,” என்கிறார், மதுரை அப்போலோ மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் முருகன் ஜெயராமன்.
Read more »
Saturday, 19 April 2014
காலை உணவு பிரெட்?
இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை.
இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப்போகும்.
Read more »
வியர்க்குரு மறைய எளிய குறிப்புகள்
ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.
Read more »
வியர்வையில் இருந்து தப்பிக்க சில யோசனைகள்
எப்போதும் அதிகமாக வியர்த்தால், அது மிகுந்த சங்கடமான நிலையை ஏற்படுத்தும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும்.
Read more »
மூட்டு வலியில் இருந்து தப்பிக்க என்னதான் வழி ?
மூட்டு வலியில் இருந்து தப்பிக்க என்னதான் வழி ?
விபத்து, திடீர் அசைவு, அதிக இயக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தசை வலிகளை சில நடைமுறைகளால் தவிர்க்கலாம்.
உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தசைகளை நீட்டி மடக்க வேண்டும்.
சூடான ஒத்தடம் கொடுப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.
புரதங்கள் எலும்புக்கான கட்டமைப்பை வலுப்படுத்தும்.
Read more »
Friday, 18 April 2014
தாய்பால் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தாய்பால் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
உலகத்தில் இடத்துக்கு இடம் மாறுபட்ட உணவுகளை உட்கொள்கிறோம் . (கோதுமை , அரிசி ,கிழங்கு) ஆனால் உலகம் முழுவதும் ஒரு மனதாக எல்லேரும் ஏற்றுக்கொண்டு கொண்டு உட்கொள்ளும் ஒரே உணவு தாய் குழந்தைக்கு ஊட்டும் தாய் பால் மட்டும் தான். அது நிச்சயமாக அதிசய உணவு. நமது இந்திய சகோதரிகளை கருத்தில் கொண்டு மனம் வெதும்பி இந்த பதிவை எழுதுகிறேன் திருமணமான எல்லேரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
Read more »
வழுக்கை விழுவது ஏன்?
தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு.
ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.
Read more »
Thursday, 17 April 2014
மூட்டு வலி என்றால் என்ன ? எதனால் ஏற்படுகிறது ?
மூட்டு வலி என்றால் என்ன ? எதனால் ஏற்படுகிறது ?
நமது உடலின் இயக்கத்தில் எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. நாம் நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள்.
Read more »
பித்த வெடிப்பு மறைய 10 டிப்ஸ் !!
பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பாத பிரச்சனைகளுள் மிக முக்கியமானது பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்ளும் பெண்களோ ஏராளம்.
Read more »
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...
பொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது தான்.
Read more »
மூக்கடைப்பு தீர எளிய வழிகள்
மூக்கு அடைப்பை விரட்ட முத்தான ஆலோசனைகள் !!
பொதுவாக மழைக்காலங்களில் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இவ்வாறு மூக்கடைப்பு ஏற்படுவதற்கு சளி, அலர்ஜி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும். அதிலும் சளி அல்லது அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூக்கின் வழியாக தூசிகள் செல்வதால், எரிச்சலை ஏற்படுத்துவதுடன், மூக்கு துவாரங்களில் புண்களை ஏற்படுத்திவிடும். இதனால் வெளியேறக்கூடிய அதிகப்படியான சளியானது உற்பத்தி செய்யப்பட்டு, மூக்கிலேயே தங்கி, அடைப்புக்களை ஏற்படுத்திவிடுகின்றன.
Read more »
Wednesday, 16 April 2014
தலைவலியில் இருந்து விடுபட
தலைவலியில் இருந்து விடுபட ஐந்து கை வைத்தியங்கள் !!
தலைவலிக்கும் போது நல்ல இயற்கைக் காற்று படும்படி நடைப்பயிற்சி செய்தால் தலைவலி மட்டுப்படுத்தப்படும்.
Read more »
கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க எளிய குறிப்புகள்
முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது... செழுமையான கன்னங்கள்! ஆப்பிள் போல கன்னங்கள் இருந்து விட்டால், அப்சரஸ்தான் நீங்கள்!
ஆனால் சிலருக்கு, அந்தத் தளதள கன்னங்களே கவலைத் தருவதாக அமைந்து விடும். ஆம்... சிலரின் பருத்த கன்னங்கள், அவர்களை இன்னும் பருமனாகக் காட்டலாம்.
Read more »
கழுத்து கருமையை போக்கணுமா?
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும்.
Read more »
குழந்தைகள் சாக்லெட்டுகளை அதிகம் சாப்பிட்டால்
பெரியவர்களான நமக்கே சாக்லெட் என்றால் கொள்ளை பிரியம் எனும்போது குழந்தைகளுக்கு கேட்கவா வேண்டும்? அனைத்து சாக்லெட்களையும் அவர்கள் விரும்புவார்கள்.
Read more »
Tuesday, 15 April 2014
அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்
பரம்பரைக் காரணங்களால் கொலஸ்ட்ரால் அதிகரித்தவர்களுக்கு தோலில் மஞ்சள் படிவுகள் காணப்படும். இதை ஸாந்த லேஸ்மா (Xanthelasma) என்று சொல்வார்கள். பெரும்பாலும் கண்களுக்கு கீழே காணப்படும். இந்தக் கொழுப்பு படிவங்கள் நோயாளிகளின் தசை நாண்களிலும் படிய வாய்ப்புண்டு.
Read more »
சமைத்த தக்காளி.. கேன்சருக்கு மருந்து!
சமைத்த தக்காளி.. கேன்சருக்கு மருந்து!
சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார்.
Read more »
Monday, 14 April 2014
பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்
பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்! ஆய்வில் தகவல்
பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Read more »
தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்
தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்
ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவுடன் தேனை சேர்த்து உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். அடிக்கடி நினைவு மறதி ஏற்படுபவர் அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வதை வழக்க மாக்கிக் கொண்டால் நினைவு மறதி சிறிது சிறிதாக மாறிவிடும். நினைவாற்றல் கூடும்.
Read more »
சளித்தொல்லைக்கு மருந்தாகும் கருந்துளசி
சளித்தொல்லைக்கு மருந்தாகும் கருந்துளசி
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை.
Read more »
Sunday, 13 April 2014
வயிற்று வலி எளிதாய் போக்க
உஷ்ணத்தினால் வயிற்றில் எரிவது போலவும், முறுக்குவது போலவும் சில சமயங்களில் உபாதைகள் ஏற்படுவது என்பது ஒரு சிலருக்கு இயல்பானதே. இதற்கு மருந்தை தேடிக்கொண்டு எந்த மருத்துவரிடமும் செல்ல வேண்டாம். தனியா 100 கிராம், மிளகாய் 5 கிராம், மிளகு 3 கிராம், துவரம்பருப்பு 50 கிராம், பெருங்காயம் 5 கிராம், உப்பு வேண்டிய அளவு இவற்றை தனித்தனியே வறுத்து சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
Read more »
தலையில் வழுக்கை விழாமல் தடுப்பது எப்படி?
Read more »
Subscribe to:
Posts (Atom)