Saturday, 31 May 2014

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்!!!


உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது.
Read more »

ஓட்ஸ் உண்மையிலேயே உடல் எடையை குறைக்குமா..?


ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது.
Read more »

Thursday, 29 May 2014

ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்


ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். உடற்பயிற்சி என்றதுமே அனைவரும் ஜிம்முக்கு தான் படை எடுப்பர். ஆனால் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம். அது தான் ரன்னிங்/ஓடுதல். அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின் அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது.
Read more »

கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுகிறதா?


மலம் கழிக்கும் போது கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுகிறதா? தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல். பொதுவாக இந்த மாதிரியான நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ஒன்று உணவு முறை மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள் தான். இந்த மாதிரியான நிலையை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கின்றனர். மேலும் நிபுணர்கள், கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால், உள்ளுறுப்புக்களில் ஏற்படும் இரத்தக்கசிவு தான் காரணமாக தான் இருக்கக்கூடும். எனவே இந்த நிலை வந்தால், உடனே மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

Read more »

அப்பெண்டிக்ஸ் இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!



குடல்வால் அழற்சி என்பது நமது பெருங்குடலில் ஒட்டியிருக்கும் புழு போன்ற பையில் ஏற்படும் அழற்சி ஆகும். குடல்வால் அழற்சி நோயில் அதிகப்படியான வலி காணப்படும். மேலும் இதற்கு அறுவை சிகிச்சை தேவையான ஒன்றாகும். இந்த நோயில் குடல் வாலானது வெடித்து உயிருக்கே ஆபத்தான நிலை கூட ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் அதற்கு முன்னரே அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் இதை நீக்கிவிடுவார். ஆரம்ப கட்டத்தில் இந்நோயில் அடிவயிற்றில் வலி காணப்படும். மேலும் இத்துடன் பல்வேறு அறிகுறிகளும் காணப்படும். எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது.

Read more »

Wednesday, 28 May 2014

பெண்களுக்கான சில அழகுக்குறிப்புகள்


அலுவலகம் செல்லும் பெண்கள் முகத்தை தினமும் இரவில் கிளென்சர் போட்டு சுத்தப்படுத்த வேண்டும் . கிளென்ஸரை கடைகளில் வாங்க முடியாதவர்கள், வீட்டில் உள்ள சில பொருட்களையே இதற்கு உபயோகிக்கலாம்.

வறண்ட சருமம் கொண்ட பெண்கள் எனில்...

காய்ச்சாத பால் இந்த வகை சருமத்துக்கு மிகவும் ஏற்றது. வெறும் பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, விரல்களால் மென்மையாகத் தட்டி, வட்ட வட்டமாக மஸாஜ் செய்யுங்கள்.

மூன்று நிமிடங்கள் இப்படிச் செய்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், முகம் ‘பளிச்’சென்று இருக்கும்.

‘ஓட்ஸ் மீல்’ என கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி காய்ச்சாத பாலுடன் கலந்து ‘பேஸ்ட்’ மாதிரி செய்து கொள்ளுங்கள்.

இதை முகத்தில் தடவி வட்ட வட்டமாக விரல்களால், மூன்று நிமிடங்களுக்கு மஸாஜ் செய்யுங்கள்.

பிறகு, வெதுவெதுப்பான நீரினால் முகத்தைக் கழுவுங்கள்.

எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் எனில்..

சருமத்திலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பதனால்தான் முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிகிறது. இப்படி எண்ணெய் வழிவதைத் தடுக்கும் ஒரு மிகப் பெரிய ஆயுதம், நம் வீட்டுச் சமையலறையிலேயே இருக்கிறது. நன்றாக புளித்த தயிர்தான் அது!

புளித்த தயிருக்கு astringent  குணம் உண்டு. அதாவது, சருமத்தில் உள்ள பெரிய துளைகளை தயிர் மூடிவிடும். இதனால், முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியாது.

கிளென்சராக தயிரை உபயோகிக்க, ‘ஓட்ஸ் மீலு’டன் தயிரைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி, ஐந்து நிமிடங்களுக்கு, விரல்களால், வட்ட வட்டமாக மஸாஜ் செய்யவேண்டும்.

பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் முகத்தைப் ‘பளிச்’சென்று வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பல பெண்களுடைய தோற்றத்துக்கு மைனஸ் பாயிண்ட்டாக இருப்பது பருக்கள்தான். எப்படியாவது பருக்களை குணமாக்கிவிட்டாலும், அதனால் ஏற்பட்ட தழும்புகள், முகத்தில் அப்படியே நிலைத்து நின்று, முக அழகையே கெடுத்துவிடும்.

பருக்கள் வருவதை எப்படித் தடுப்பது?

சருமத்தில் எண்ணெய் அதிகமாகச் சுரப்பதால்தான் பருக்கள் வருகின்றன. வேறு பல காரணங்களாலும் பருக்கள் வரக்கூடும்.

ஹார்மோன் கோளாறுகள்தான், பருக்கள் வர முக்கியக் காரணம். டீன் ஏஜ் பெண்களுக்கு, வயதுக்கு வந்தவுடன், உடலில் சில ஹார்மோன் மாறுதல்கள் வரும். எனவேதான், இந்த வயதுப் பெண்களுக்குப் பருக்கள் அதிகமாக இருக்கிறது.

வயிற்றில் அல்சர் அல்லது வாய்வுப் பிரச்னை இருந்தாலும் கூட பருக்கள் வரலாம்.

மன அழுத்தம் அதிகமாக இருந்தால், சரும வியாதிகளும், மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் அதிகமாக வரும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உங்களுடைய வேலை அதிகமான அழுத்தம் தருவதாக இருந்தால்கூட, உங்கள் முகத்தில் பருக்கள் வரும்.

வைட்டமின் பி, இரும்புச் சத்து உடலில் குறைந்தாலும் பருக்கள் தோன்றலாம்.

பருக்களைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?

உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்.

உங்களுக்கென்று தனியாக சோப்பு, சீப்பு, டவல் உபயோகியுங்கள்.

மனதை எப்போதும் லேசாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் குறைபாடு (அல்லது) வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

முகத்தில் முதலில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலும் அதை உடனே கிள்ளிவிடாதீர்கள். இப்படிச் செய்தால் அந்தப் பருவிலுள்ள இன்ஃபெக்ஷன் முகத்தின் பல இடங்களிலும் பரவி, நிறைய புதுப்புது பருக்கள் வர ஆரம்பித்துவிடும்.

பருக்களைக் குறைப்பது எப்படி?

ஒன்றிரண்டு நாட்களிலேயே பருவைக் குணமாக்க முடியாது. பொறுமை ரொம்ப முக்கியம். நிறைய பெண்கள், முகத்தில் பெரும்பாலான இடங்களில் பருக்கள் வந்தவுடன்தான், சிகிச்சையையே தொடங்குவார்கள். இது ரொம்ப தப்பு.

சில பருக்கள் தலைகாட்டத் தொடங்கியவுடனேயே நாம் இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடவேண்டும்.

இதற்கு நீங்கள் கடைகடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. நம் வீட்டுக்குள்ளேயே பரு பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது.

புதினா மிகவும் அற்புதமான மருத்துவக் குணம் கொண்டது. முகத்திலுள்ள எண்ணெய்ப் பசையைக் குறைத்து பருக்களை மறையச் செய்யும் ஜாலம் புதினாவுக்கு உண்டு.

புதினா இலையை அரைத்து, பருக்கள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்துப் பின் கழுவிவிட வேண்டும். தினமும் தொடர்ந்து இதே மாதிரி செய்து வந்தால், பருக்களுக்கு ‘குட்பை’ சொல்லிவிடலாம்.

புதினா கிரீம்கள் கூட கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும், முகத்தில் போடலாம்.

அதேபோல, கற்பூர எண்ணெய் உள்ள க்ரீம்களுக்கும் பருக்களைப் போக்கும் சக்தி உண்டு. இந்தக் க்ரீமை காட்டனில் தொட்டு, பருக்கள் மீது தடவி விடுங்கள். அரைமணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவி விடுங்கள்.

வீட்டில் நல்ல சுத்தமான சந்தனமும் பசு மஞ்சளும் இருந்தால் நீங்கள் எதைத் தேடியும் ஓட வேண்டியதில்லை. சந்தனம், மஞ்சள் இரண்டையும் சமமான அளவு எடுத்து, தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை பருக்களின் மீது மட்டும் தடவி, அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவுங்கள். தினமும் இதேபோல் செய்தால் உங்கள் முகம் மொசைக் தரை போல மழமழவென்று அழகாகிவிடும்.

முழங்கால் வலியை குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்

நமது உடலில் மிகவும் அதிகமாக காயம் படும் பாகமாக முழங்கால்கள் உள்ளன. இந்த காயங்கள் விபத்தினாலோ அல்லது அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதாலோ என ஏதாவதொரு காரணங்களால் ஏற்படலாம். தசை நார்கள் கிழிவதாலோ அல்லது காயங்களாலோ கூட முழங்கால் வலிகள் ஏற்படலாம். மேலும், ஒவ்வொரு நாளும் நாம் நடக்கும் போதும், குதிக்கும் போதும், படிகளில் ஏறும் போதும் என பல்வேறு செயல்பாடுகளின் போதும் நிறைய அழுத்தங்களையும் முழங்கால்கள் எதிர்கொள்கின்றன.

Read more »

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!


ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால், நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து, அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் கோடைக்காலத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவோம். அந்த அளவில் வெளியே அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆகவே பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Read more »

Tuesday, 27 May 2014

ஆரோக்கியமான 6 காலை உணவுகள்!!!

காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அது உங்கள் கலோரியை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு உண்ணும் உணவு தானியத்தை வாங்குவதற்கு முன்பாக அதன் ஊட்டச்சத்தை பார்க்க பரிந்துரைக்கப்பட்டாலும், அனைத்து உணவு தானியங்களையும் ஆடை நீக்கிய பாலில் கலந்து உட்கொண்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

Read more »

மாத்திரை இல்லாமல் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த



இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளதா? இதற்கு பணி சூழல், வாழ்க்கை சூழல், போட்டி, உடல் நிலை என பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த காரணமாக இருந்தாலும் இரத்த அழுத்தம் வருவது நல்ல அறிகுறி என்று சொல்ல முடியாது. இங்கே தரப்பட்டுள்ள 10 குறிப்புகளை படித்த இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

Read more »

Monday, 26 May 2014

டூத் பிரஷ் பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்



வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத் தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறை யில் பராமரிப்பது மிகவு ம் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில் கள் தேய ஆரம்பித்தவுட ன் டூத் பிரஷை மாற்றுவ து அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கி றார்கள்.

அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணை யாக இருக்கிறது என்று இங்கிலா ந்திலுள்ள மான்செஸ்டர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். அதிலும் மூடி வைக்க ப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியா க்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக் கை ஏற்படுத்தும் ஈ-கோ லி பாக்டீ ரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டா பில் கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.

உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரி யாமல் மறைந்திருப்பது என்னதெரியுமா ?

ஏராளமான கிருமிகளின் பண்ணை யே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர் கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப் படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லிய ன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீ ரியாவும் இதில் அடக்கம்.

வாய் நிறைய பாக்டீரியா

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகைகொடுக்காமல் வசிக்கின்றன. இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங் குகிறது என்றால், இந்த பாக்டீரி யாக்களின் எண்ணிக் கை வழக் கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான். பல் லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள்தான். அவை உங்கள் வாய் என்ற வாட கை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.

பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?

டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத் துவதால் காயம் ஏற்படுகிறது. இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெ ரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில் லை. ஆனால் டூத் பிர ஷை மற்ற வர்கள் பயன்படுத்தினால் அவ்வ ளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடிபோய் விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிக ள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.

டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?

அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங் கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக் குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொ ற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள்

பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல் லது மிக அருகிலோ இருக்கு ம். ஒவ்வொரு முறையும் க ழிப்பறையைப் பயன்படுத்து ம் போது, அதன்மூலம் காற் றில் ஏராளமான பாக்டீரியா க்கள் சுற்றுலா செல்கின்ற ன. அதனா ல் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கென வே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன. அதனால் டூத் பிர ஷ்களை உங்கள் கழிப் பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள் ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.

டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோ ல்டர்கள்

பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறை யிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றா வது அசுத்தமான இடம் இதற்குத் தான்.

டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள்

* ஒவ்வொரு முறை பல் துலக்கிய தும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.

* ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய் வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பத மான டூத் பிரஷ், பாக்டீரியா க்களுக்கு ஜாலியான தங்குமி டம் ஆகும்.

* தலைப்பாகம் மேலே வரும் படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுக ளை உபயோகியுங்கள்.

* உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோ தரி, சகோதரன், கணவன், மனை வி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்க ள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல் லை. இல்லை. இல்லை.

* ஒரே கப்பில் ஃப்ளவர் வாஷ் போ ல மொத்தமாக டூத் பிரஷ்க ளைப்போட்டு வைக்காதீர்கள். டூத் பிரஷ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது, அவை தங்கள் வசமுள்ள பாக்டீரியாக்களைப் பெ ருந்தன்மையோடு பரிமாறிக் கொள்கின்ற ன.

எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?

ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாத ங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிர ஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற் றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்ப தற்கோ அது அறிகுறி. அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள்

ஈறு சம்பந்தமான நோய்கள், பற் சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் ர்நாற்றம் ஆகியவை ஏற் படக் காரணம் பாக்டீரியா க்களே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக் குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியே ற்றிவிடும். பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத் தி வாய்கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதை த் தடுக்கலாம்.

வெங்காயம் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா?


வெங்காயம் என்றாலே எல்லோருக்கும் கண்ணில் தண்ணீர் வர வழைக்கும் காய் என்று தான் தெரியும். ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை. வெங்காயத்தை சமையலில் இருந்து தவிர்ப்பது என்பது இயலாத காரியம்.
Read more »

அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!


உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன.

Read more »

Sunday, 25 May 2014

40 வயதை கடந்தவர்கள் வாக்கிங் செய்யும் முறை


காலையில், காலைக்கடனை முடித்துவிட்டு நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். குழந்தைகள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்சனை இல்லாதவர்கள் நடைப்பயிற்சிக்குப் பதில், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

Read more »

இரவில் தலையில் போட ஏற்ற ஹேர் மாஸ்க்குகள்



முடியை பராமரிப்ப ஹேர் மாஸ்க் போடுவது தான் சிறந்தது. அதிலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் போட வேண்டும். அப்படி ஹேர் மாஸ்க் போட்டால் குறைந்தது 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

Read more »

Saturday, 24 May 2014

வெள்ளைநிற பற்கள் ஆரோக்கியமானவையா?


டூத் பேஸ்ட் நிறுவனங்கள். ‘ஒயிட்னர் பேஸ்ட்’ என்ற பெயரில் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட்டுகள் இங்கு அறிமுகமாகி உள்ளன. டென்ட் டிஸ்ட்டுகள் பரிந்துரைக்கும் பேஸ்ட்டுகள்…  டென்ட்டிஸ்ட்டுகளே உபயோகிக்கும் பேஸ்ட்டுகள்… என எல்லாமும் சேர்ந்து நம் பற்களை வெள்ளையாக்க வாக்குறுதி தருகின்றன.திடீரென நம் பற்களை வெள்ளை நிறத்தில் பளீரிட வைப்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கின்றன 
Read more »

முதுகுவலி தீர எளிய பயிற்சி கோணாசனம்

Kona என்றால் முழங்கை என்று அர்த்தம். ஆசணம் என்பது ஒரு கோணத்தில் ஒரு நிலைப்பாட்டோடு இருப்பது.இந்த கோணாசனம் முழங்கையிலிருந்து , முதுகெலும்பு மற்றும் பின்புறம் வரை செயலாக்கம் கொடுத்து பலனளிக்கும்.

Read more »

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்




1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
Read more »

குழந்தையின்மைக்குக் காரணமாகும் கருக்குழாய் அடைப்பு


குழந்தையின்மைக்கான காரணங்களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமான பிரச்னை இது. கருக்குழாய் அடைப்பு பற்றிய விழிப்புணர்வோ, அதைக் கவனிக்க வேண்டிய அவசரமோ, அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகளோ பலருக்கும் இல்லை.

Read more »

Friday, 23 May 2014

சொரியாசிஸ் என்ற செதில் உதிர்தல் பற்றிய தகவல்கள்



சோரியாசிஸ் என்ற செதில் உதிர்தல் முதலில் சிலருக்குத் தலையில் பொடுகுபோல ஆரம்பிக்கும். பொடுகு போலவே தோற்றமளித்து பின்னர் மீன் செதில் போல கொட்டத் தொடங்கும். அது மினுமினுப்புடனும் இருக்கும்.

Read more »

தொப்பை குறைய மலச்சிக்கல் நீங்க யோக முத்திரா



யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன.  நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன.
Read more »

சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்


உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

Read more »

Thursday, 22 May 2014

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

Read more »

ஆஸ்துமாவுக்கான சித்தமருத்துவ குறிப்புகள்



ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.

Read more »

பிரசவத்திற்கு பின் முதுகு வலியா? இதை படிங்க


பிரசவத்தின் போதும் சரி, அதற்கு பின்னரும் சரி நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு அளவே இருக்காது. பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் இத்தகைய பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.
Read more »

தாய்மை அடைய தகுந்த வயது . . .



நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர்.
Read more »

Wednesday, 21 May 2014

மாதவிலக்கு பிரச்சனைக்கான மருத்துவகுறிப்புகள்





மாதவிலக்கு பிரச்னை தீர...

Read more »

உடல்நலம் தரும் சூரிய நமஸ்காரம்



சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது.
Read more »

சுகப்பிரசவம் சுலபமே! --- மருத்துவ டிப்ஸ்




பிரசவம் என்பது அற்புதம். வலி நிறைந்த ஒரு பயணம் இது. ஆனாலும், வலிகளைத் தாங்கிக்கொண்டு பெற்றெடுத்த குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் பட்ட வேதனை எல்லாம் தாயானவளுக்குப் பறந்தோடிவிடும். உதிரமும் பனிக்குட நீருமாக அந்தச் சிசு வெளியே வருகையில், உடல் வலி மறந்து உலகத்தின் அதிசிறந்த படைப்பாளியாக ஆகிவிட்ட நெகிழ்வில் பெற்ற வயிறு சிலிர்க்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்குப் பிரசவங்கள் அறுவைச் சிகிச்சை மூலமே நடைபெறுகின்றன. வலியையும் வாகை சூடிய நெகிழ்வையும் ஒருசேர உணர இன்றைய காலகட்டத்தில் எத்தனை தாய்களால் முடிகிறது?

Read more »

Tuesday, 20 May 2014

ஊளைச் சதையை குறைக்க எளிய மருத்துவ குறிப்புகள்



இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெணகள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது. வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
Read more »

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்



1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

Read more »

Monday, 19 May 2014

உடல் எடையைக் குறைக்க -காராமணி (தட்டைப்பயிறு)



உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இதை சாப்பிடுங்கோ !!!

Read more »

அதென்ன ஆயில் புல்லிங் ? அதன் பலன்கள்தான் என்ன?




ஆயில் புல்லிங்  எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து  வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு
அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Read more »

காது மூக்கு சம்பந்தமான சில மருத்துவகுறிப்புகள்



தினமும் காதுகளில் சோப்பு போட்டு சுத்தம் செய்யவேண்டும்.  வயதானவர்களுக்கு காதுகளை சரிவர சுத்தம் செய்ய கொள்ள முடியாமல் போகலாம்.
Read more »

Sunday, 18 May 2014

தலைவலித் தைலத்தை பயன்படுத்தும் முறை


தலையணைக்கு அருகில் தலைவலித் தைலத்தை வைத்துத் தூங்கும் பழக்கம் இப்போதும்கூட பலருக்கு இருக்கிறது.

Read more »

இரத்தத்தை சுத்தபடுத்த சில இயற்கை வைத்திய முறைகள்



உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதுஅவசியமாகும்.

Read more »

Saturday, 17 May 2014

உடல் எடை எளிதாய் குறைக்க எலுமிச்சை


அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும்.
Read more »

இருமலை போக்க சில வீட்டுவைத்திய முறைகள்



இருமலுக்கு இயற்கை வைத்தியம்:

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை
Read more »

முகத்தில் வளரும் முடிகளை நீக்க எளிய வழிமுறைகள்


பெண்களின் அழகை கெடுக்கும் வகையில் முகத்தில் வளரும் முடிகள் இருக்கும். அந்த முடிகள் முகத்தை கருமையாகவும், அசிங்கமானதாகவும் வெளிப்படுத்தும்.
Read more »

Friday, 16 May 2014

6 பேக் உடலமைப்பிற்கு ஆசைபடுகிறிர்களா?



சமீப காலங்களில் வந்த படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மான்கான், கோலிவுட்டில் சூர்யா, பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பில் நடித்தனர்.
Read more »

கோடையில் காரம் வேண்டாம் ஹைபர் அசிடிட்டி வரும்



கோடையில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்படும். காரம், புளிப்பு அடங்கிய உணவுகள் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு ஒரு வழி செய்துவிடும். எனவே கோடைகாலம் முடியும் வரை காரமாக எதையும் சாப்பிடவேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

Read more »

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில எளிய வழிகள்!!!



மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும்.
Read more »

Thursday, 15 May 2014

மொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்



இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது. யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.

Read more »

மினரல் வாட்டர் பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை



'தவிச்ச வாய்க்குத் தண்ணீர்’ என்ற நிலை மாறி, தண்ணீரைக் கூட பணம் கொடுத்துதான் வாங்கவேண்டி இருக்கிறது. அப்படியே வாங்கினாலும், குடிக்கும் தண்ணீர் சுகாதாரமாக இருக்கிறதா என்றால், அதுவும் சந்தேகம்தான்.

Read more »

Wednesday, 14 May 2014

அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?


அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.
Read more »

மலச்சிக்கல் காரணமும் தீர்வும்



மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
Read more »

Tuesday, 13 May 2014

பொடுகு தொல்லையா? கவலை வேண்டாம்



பெரும்பாலானோர் பொடுகு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகளவு கூந்தல் உதிர்வதால் நாளடைவில் வழுக்கை விழும்.
பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலையில் போதிய எண்ணெய் இல்லாததால் தான்.

Read more »

வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கலாம்



தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

Read more »

எடையை குறைக்க எளிய வழிகள்



உங்கள் உடலின் எடை ஒரே நாளில் அதிகரித்து விடவில்லை. அதேபோல் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அப்படிக் குறைப்பதுதான் ஆபத்தில்லாதது. உடல் எடைக்கும் சர்க்கரை நோய், இதயநோய், ரத்தம் அழுத்தம் போன்ற நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் எடை விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

Read more »

உடலில் சர்க்கரையின் அளவு குறையும்போது ...



சர்க்கரை நோயாளிகளுக்கு சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து மாத்திரை ஊசிகளைப் போடுவது கொஞ்சம் நாளாக ஆக அலுப்பூட்டும்.
Read more »

Monday, 12 May 2014

இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சில ஆலோசனைகள்



1. இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.

Read more »