Monday, 30 June 2014
மகப்பேறு தழும்புகளை எளிதில் குறைக்க சில வழிகள்!!!
கர்ப்பத்தின் போது பெரிதான வயிறு, பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறையும். நார்மல் டெலிவரி ஆனாலும் சரி, சிசேரியன் ஆனாலும் சரி, வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் பெண்களின் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பெற்ற பின், பொதுவாக எல்லோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை தான் தழும்புகள் என்றாலும், இது மிகுந்த மன சங்கடத்தை அளிக்கும்.
Read more »
Saturday, 21 June 2014
சரும சுருக்கங்களை தடுப்பதற்கான சில எளிய வழிகள்!!!
சுருக்கங்கள் துணியில் இருந்தாலும் சரி, சருமத்தில் இருந்தாலும் சரி அது தோற்றத்திற்கு இழுக்குதான். அனைவருக்கும், குறிப்பாக பெண்களுக்குக் கவலையளிக்கும் ஒரு விஷயம் இந்த சரும சுருக்கம். சரும சுருக்கங்களைப் போக்க சந்தையில் குதித்திருக்கும் அழகு சாதனப் பொருட்கள் ஏராளம்.
Read more »
Friday, 20 June 2014
சர்க்கரை நோயை உண்டாக்கும் உணவு பழக்கவழக்கங்கள்!!!
நகர்ப்புறங்களில் நீரிழிவு நோய் என்பது அவர்களது தவறான உணவு பழக்கவழக்கங்களால் தற்போது அதிகரித்து வருகிறது. பாதி சமைக்கப்பட்ட உணவு பொருள்கள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் மல்டிநேசனல் கம்பெனிகளால் ஊக்குவிக்கப்பட்டு அனைத்து மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி, அவர்களுக்கு நீரிழிவு நோய் போன்ற வியாதிகளை ஏற்படுத்துகிறது. இதில் தற்பொழுது குறைந்த வயதுள்ளவர்கள் உடல் எடை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
Read more »
Thursday, 19 June 2014
முகத்தை மெருகேற்றும் கற்றாழை ஜெல்
வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்றான கற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும். குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். இதில் ஆன்டிபாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பருவை நீக்குகின்றன.
Read more »
Read more »
நாள் முழுவதும் களைப்புடன் இருப்பது போல் உணர்வதற்கான காரணங்கள்!!!
தூக்கம் கலைந்த பின்னரும், உடலானது சோர்வுடன் ஆற்றல் இல்லாமல் இருப்பது போல் உள்ளதா? இத்தகைய சோர்வினால் பல நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு கூட எடுத்துள்ளீர்களா? எப்போது ஒருவருக்கு இப்படி அதிகம் வேலை செய்யாமல் அளவுக்கு அதிகமான களைப்பு ஏற்படுகிறதோ, அப்போது உடலின் மேல் சற்று கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் உடலில் ஒருசில பிரச்சனைகள் இருந்தாலும், உடலானது மிகுந்த சோர்வுடன் இருக்கும்.
Read more »
சர்க்கரை நோயை விரட்ட ஆரைக்கீரை...
செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவரம் . இலையே மருத்துவப்பயனுடையது,கீரைக்கட்டாக விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல்,தாகம் தணித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது,இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும்,செரியாமை பிரச்சினையும் அகலும்.
Read more »
Wednesday, 18 June 2014
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...
உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது.
Read more »
Tuesday, 17 June 2014
டை அடித்துவிட்டுக் குளிக்கலாமா?
கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது. பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும்.
Read more »
முகம் ஜொலிக்கணுமா? இதை முயற்சி பண்ணுங்க
முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை.
வீட்டிலேயே செய்த கொள்ளலாம். முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும்,
Read more »
மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Read more »
Monday, 16 June 2014
நல்லெண்ணைய் ரொம்ப நல்ல எண்ணெய்
எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.
Read more »
கூந்தலை எப்படி வார வேண்டும்-? கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்
கூந்தலை எப்படி வார வேண்டும்-?
கூந்தலை கலைய விடக்கூடாது, கூந்தலை வாரிவிடும் போது உயரத்துக்கேற்றபடி வாரிவிட்டுக் கொள்ள வேண்டும். சில பெண்களுக்கு இயற்கையாகவே மிக நீளமாக இருக்கும். ஆனாலும் இவர்கள் கூந்தலின் நுனிகளை நன்றாகப் பின்னிவிட வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் பிளந்துவிடும்.கூந்தலின் நிறம் பழுப்பு நிறமாக மாறிவிடும்!
கூந்தல் கருமை நிறத்தை இழந்து பழுப்பு நிறமாக மாறிவிட்டால் அழகை இழந்து விடும். பழுப்பு நிறமாகி விட்ட கூந்தலின் அடியில் உள்ள உயிர் அணுக்கள் பாதிக்கப்பட்டன என்று பொருள்! குள்ளமாக இருக்கும் பெண்கள் சற்று எடுப்பாக இருக்க தலையை வாராமல் கலைத்து விட்டுக்கொண்டு உயரமாக காட்சி அளிக்கிறார்கள். தலை படியாமல் இருக்க இவர்கள் எண்ணெய் தடுவுவதே இல்லை.அடிக்கடி ஷாம்பூவைப் போட்டு தலையைச் சுத்தம் செய்து கூந்தலை படியவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இது தவறு.
குள்ளமாக பெண்கள் இலேசாக தலை வாரி உச்சியில் சற்று தூக்கினாற்போல் கொண்டை போட்டுக்கொண்டால் எடுப்பாக இருப்பார்கள்.
கூந்தல் பராமரிப்பு
1. வாரம் ஒரு முறை ஹாட் ஆயில் மசாஜ் செய்து கூந்தலை ஷாம்பூ போட்டு அலசவும்.
2. ஹேர் டிரையரை கூந்தலின் வேர்கால்களில் படும்படி உபயோகிக்க கூடாது. வரண்ட கூந்தலுக்கு ஹேர் டிரையரை பயன்படுத்தவே கூடாது.
3. தலைக்கு பயன்படுத்தும் சீப்பு, ப்ரஷ், டவல், ஹேர்பேண்ட் ஆகியவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
4. முடி குறைவாக இருந்தால் 1 டீஸ்பூன் விட்டமின் இ எண்ணெயை முதல் நாள் இரவில் தலைமுடியில் தடவி அடுத்த நாள் அலசுங்கள்.
5. எலுமிச்சம் சாற்றை ,முட்டையை,அகத்திக்கீரையை அல்லது பொன்னாங்கண்ணி கீரையை (அரைத்து) தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
6. வெந்தயப்பொடியை எண்ணெயில் சிறிதளவு விட்டு குழைத்து தலையில் தடவி ஊறவைத்துக் குளிக்கலாம்.
7. தேன், வெள்ளரிக்காய், ஆப்பிள், அன்னாச்சிப்பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். முடி வளர புரோட்டீன்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவது அவசியம்.
குளிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. காலை, மாலை இருவேலைகளும் குளிக்க ஏற்ற நேரங்கள். இடைப்பட்ட நேரங்கள் குளிப்பது நல்லதல்ல.
2. உணவு உண்ட பின்னரும், நன்றாக வியர்த்திருக்கும் போதும் குளிக்கக்கூடாது.
3. அஜீரணக்கோளாறு, கண் நோய், காய்ச்சல் ஆகிவற்றால் அவதிப்படும் நேரங்களில் குளிக்கக்கூடாது.
5. வாசனைப்பொடி, கடலைமாவு போன்றவற்றைத் தேய்த்து கழுவினால் அழுக்கும், எண்ணெய் பசையும் அகன்று போகும்.
6. சோப்பு உபயோகிக்கும்போது கழுத்து, கழுத்தின் பின்புறம், காது, கால்களின் இடுக்குப்பகுதிகள் போன்ற அழுக்கு படியக்கூடிய பகுதிகள் சோப்பை ஒருமுறைக்கு இருமுறை அழுத்தி தேய்த்து குளிக்க வேண்டும்.
7. சோப்பை அதிகமாக பயன்படுத்துவது உடலின் மேற்புறதோலுக்கு நல்லதல்ல. தோலில் இருக்கும் எண்ணெய்த்தன்மை மாறி வறண்டுவிடும். 8. குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாற்றை பிழிந்து குளிக்கலாம். இது நல்ல புத்துணர்ச்சியைத் தரும்.
Friday, 13 June 2014
சிறுநீரக கற்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்
காய்கறிகள்: தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.
Read more »
Thursday, 12 June 2014
தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அக்காலத்தில் எல்லாம் கூந்தலைப் பராமரிக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை அதிகரித்து, அவற்றை போக்க கடைகளில் விற்கப்படும் மருந்துகள் கலக்கப்பட்ட எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தி, பின் அந்த எண்ணெயால் மேலும் பல பிரச்சனைகளை சந்தித்திருப்போம்.
Read more »
உடல் எடையை குறைக்க சில எளியவழிகள்
அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. ‘எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?’ என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை…
Read more »
Wednesday, 11 June 2014
கொழுப்பைக் கரைக்கும் பசலை கீரை
பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
Read more »
உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்....! - அதிர்ச்சி தகவல்
கடைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இன்ஸ்டன்ட் உணவு சாப்பிட்ட மாணவர்கள் பெரும்பாலோனோர் இதயநோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
Read more »
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 10 பழங்கள்!!!
மாம்பழம்:
பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.
Read more »
பெண்களே! முகத்தில் மீசை வர ஆரம்பிக்கிறதா? அதை நீக்க இதோ சில டிப்ஸ்
பெண்கள் என்றாலே அழகான கண்கள், ரோஜாப்பூ போன்ற இதழ்கள், மென்மையான சருமம் என்று தான் சொல்வார்கள். ஆனால் அத்தகைய மென்மையான சருமத்தில் பெண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் முடி வளர்வது. அதிலும் சில பெண்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை, வளர ஆரம்பிக்கும்.
Read more »
Read more »
Tuesday, 10 June 2014
பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள்
கருத்தரிக்காமல் இருப்பதற்கு எத்தனையே கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை அனைவரும் சரியாக வேலை செய்வதில்லை. ஆனால் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், நிச்சயம் கருத்தரிப்பதை தடுக்கலாம். இத்தகைய கருத்தடை மாத்திரைகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன.
Read more »
மூக்கில் இருந்து திடிரென்று ரத்தம் கொட்டுகிறது! ஏன்? எதனால்?
அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து தீடி ரென்று ரத்தம் கொட்டும். உண் மையில் மூக்கு ஒரு மென்மை யான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ் பகுதியில் நுண்ணிய இரத்தக் குழாய்கள் தந்துகிகள் சந்திக்கி ன்றன. இவைகள் சுலபமாக உ டையும் குழாய்கள். சிறு பாதி ப்பு ஏற்பட்டாலும் மூக்கை நோ ண்டும்போது உடை ந்து
ரத்தம் வர ஆரம்பித்து விடும்.
Read more »
புதினாவில் உள்ள பலன்கள் உங்களுக்கு தெரியுமா?
நறுமணமும், நற்சுவையும், மூலிகைத் தன்மையும் புதினாவின் புகழுக்கு காரணம். இதில் அடங்கி உள்ள சத்துக்களை பார்க்கலாம்.
* புதினா ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட மூலிகைத் தாவரம். தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. நிழல் மிகுந்த பகுதிகளில் இது நன்கு வளரும்.
Read more »
தசை சுளுக்கிலிருந்து மீள சில குறிப்புகள்
தசைகளையும். தசை நார்களையும் தாக்கும் காயங்களின் வகை தான் சுளுக்கும். இறுக்கமும். ஆற்றல் அளிக்கும் திறனை முழுவதுமாக பயன்படுத்திவிட்டால், தசைகளில் வலியும் ஏற்படுவதுண்டு. அதனால் தசைகளில் தேவையற்ற பொருட்கள் தேங்கிவிடும். தசை வலியால் உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட முடியாமல் போகலாம் அல்லது முக்கியமான அலுவலக சந்திப்புகளில் பங்கு கொள்ள முடியாமல் போகலாம். வலியில் இருந்து வேகமான நிவாரணியை பெற, வலிக்கான காரணத்தை முதலில் கண்டறிவது முக்கியமானது. தசை வலியில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு வர சில முக்கியமான தீர்வுகளை நாங்கள் விளக்கியுள்ளோம்.
Read more »
Monday, 9 June 2014
சரும கருமையைப் போக்கும் சில ஃபேஸ் பேக்!!!
கோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள்.
Read more »
உயரமாக வளர்வதற்கான சில எளிய வழிகள்!!!
இந்த உலகில் குறை இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. நிச்சயம் அனைவருக்கும் ஒருசில குறைகள் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு உயரக் குறைபாடு இருக்கும். இவ்வாறு கடவுள் விதித்த உயரத்தை மாற்றுவது சற்று கடினம் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் உயரக் குறைபாடு உள்ள மக்கள், தங்கள் உயரத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமென்று அறிய ஆவலோடு இருக்கிறார்கள். உயரத்தை அதிகரிக்க எத்தனையோ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இயற்கை முறையையே அனைவரும் விரும்புகின்றனர்.
அசிடிட்டி பிரச்சனைக்கான வீட்டு வைத்தியங்கள்
அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சனையால் அவதியுற்றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி எனப்படும். நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.
Read more »
Sunday, 8 June 2014
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்
காலை 6.00:
காலை எழுந்தவுடன் தேன் + தண்ணீர் கலந்து போதுமான அளவு அதிகம் குடிக்கவும். அல்லது இதே போல் 1/4 ஸ்பூன் சீரகப் பொடி கலந்து கொள்ளவும்.
Read more »
இரத்தத்தைச் சுத்திகரிக்கும் காளான்!
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
Read more »
Saturday, 7 June 2014
மஞ்சள் பாலின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல்வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை.
Read more »
நீண்ட கூந்தல் வேண்டுமா? இதை முயற்சி பண்ணுங்க
ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !! கூந்தலின் வேர்கள் வலுவாக இருந்தால் கூந்தல் உதிராது. கூந்தலுக்கு அவ்வப்போது மசாஜ் செய்வதன் மூலம் வேர்களை வலுவடையச் செய்யலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ.
எண்ணெய் மசாஜ்
ஒவ்வொரு கூந்தலுக்கும் ஒரு ஆயுள் உண்டு. குறிப்பிட்ட ஆயுட்காலம் முடிந்தாலும் அந்தக் கூந்தல் உதிரும். கூந்தல் உதிர்வதைத் தடுக்க அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால்களின் பலவீனத்தை இது போக்கும். கூந்தல் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.
நீராவி ஒத்தடம்
தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்துஇ அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கித் தலையில் தடவி மசாஜ் செய்து, வெந்நீரில் முக்கிப் பிழிந்த டவலால் தலைக்கு நீராவி ஒத்தடம் தர வேண்டும். பிறகு தரமான சீயக்காயோ, ஷாம்புவோ போட்டு கூந்தலை அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தாலே கூந்தல் உதிர்வு நின்று ஆரோக்கியமாக வளரும்.
பதிவு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க நண்பர்களே
எண்ணெய் மசாஜ்
ஒவ்வொரு கூந்தலுக்கும் ஒரு ஆயுள் உண்டு. குறிப்பிட்ட ஆயுட்காலம் முடிந்தாலும் அந்தக் கூந்தல் உதிரும். கூந்தல் உதிர்வதைத் தடுக்க அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால்களின் பலவீனத்தை இது போக்கும். கூந்தல் உதிர்வது கட்டுப்படுத்தப்படும். எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.
நீராவி ஒத்தடம்
தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்துஇ அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும். மாதம் ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.
பதிவு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க நண்பர்களே
இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி
இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம்.
Read more »
கோதுமை உணவுகளை அதிகமா சாப்பிட்டா கிடைக்கும் நன்மைகள்
இரத்தத்தை சுத்தப்படுத்தும்:
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
Read more »
Friday, 6 June 2014
சுருட்டை முடியை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்...
எப்போதுமே ஃபேஷனாக இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் சுருட்டை முடி. இத்தகைய சுருட்டை முடியானது சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். அப்படி இயற்கையாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தான், அந்த சுருட்டையை முடியினால் ஏற்படும் தொல்லைகள் தெரியும்.
Read more »
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது நம் உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
நம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. டைனிங் டேபிளில் ஹாயாக உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டோ சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்குத் தோன்றலாம்.
Read more »
மாதவிடாய் நிற்கும் காலத்தில் எடை அதிகரிப்பும் அதை தடுக்கும் வழிமுறைகளும்
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களிலும் அதைத் தொடர்ந்து மாதவிடாய் முற்றாக நின்ற பின்னரும் எடை அதிகரிக்கவே செய்கிறது. இடை அழகியாக இருந்தவர்கள் சள்ளை தொங்கும் குண்டுப் பீப்பாய்களாக மாறுவார்கள். இடுப்பில் மட்டுமின்றி வயிறும் பெரிதாகும். அன்ன நடை நடந்த பெண்கள் ஆயாச நடையில் அரங்கி அரங்கி நடப்பார்கள். இது உங்களுக்கும் வரவேண்டுமா?
Read more »
Thursday, 5 June 2014
நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது.
Read more »
தர்பூசணியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அனைவரும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியில்லாமலும் வைத்துக் கொள்ள முயற்சிப்போம். அதற்காக தண்ணீர் அதிகம் குடிப்பதுடன், நிறைய பழங்களையும் வாங்கி சாப்பிடுவோம். அப்படி கோடைகாலத்தில் உடலின் வறட்சியை தடுக்கும் வண்ணம் பல பழங்கள் விலைமலிவில் விற்கப்படும்.
Read more »
Wednesday, 4 June 2014
முடியின் வேர்கள் வலுப்பெற சில சிறந்த இயற்கை வைத்தியங்கள்!!!
பெரும்பாலானோர் முடிகளின் வெளிப்பகுதியை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருந்தால் மட்டுமே போதும் என்று நினைப்பார்கள். ஆனால் முடிகள் வளரும் இடமான முடியின் வேர்களான மயிர் கால்களைப் பராமரிப்பது தான் மிகவும் முக்கியம். கூந்தல் பராமரிப்பைப் பற்றிப் பேசும் போது, மயிர் கால்களின் தரம் குறித்தும் அக்கறை கொள்வது அவசியம்.
Read more »
Read more »
உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்
இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.
Read more »
அடர்த்தியான புருவங்களை பெற சில டிப்ஸ்
புருவங்கள் தான் பெண்களின் கண்களிலேயே அழகை மிகைப்படுத்தி காட்டும் பகுதியாக உள்ளன. இவை முகத்தின் அழகை வெளிப்படுத்தும் பாகமாகவும் உள்ளன. விளையாட்டிற்கு கூட நமது அழகை நாம் பாழ்படுத்த விரும்புவதில்லை. டிரிம் செய்யாத புருவமும் இப்படித்தான், தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ இருந்து நமது அழகை பாழாக்கும். நமது உடல் அமைப்பிற்கேற்ப நமது புருவங்களும் இருப்பது அவசியம். இது நமது அழகையும் அமைப்பையும் மிகைப்படுத்தும்.
Read more »
மாதவிடாய் வலியை வீட்டிலேயே குறைக்க சில அருமையான வழிகள்!!!
கடற்கரையில் காலாற நடப்பதும், எந்தக் கவலையும் இல்லாம் ஷாப்பிங் செய்வதும் மற்றும் மிகவும் பிடித்த நண்பர்களுடன் ஒரு காபி சாப்பிடுவதும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் அற்புதமான செயல்களாகும். ஆனால், மாதத்தின் சில நாட்கள் அவள் சோர்வாகவும் மற்றும் தொய்வாகவும் இருப்பதைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள்? மாதவிடாய் சுழற்சியை அவள் அனுபவிக்கும் அந்த நாட்களில் தான் அவளுடைய சுறுசுறுப்பு காணாமல் போயிருக்கும்.
Read more »
Tuesday, 3 June 2014
தீக்காய தழும்புகளை இயற்க்கை முறையில் இலகுவாக நீக்குவது எப்படி?
தீக்காய தழும்புகளை இயற்க்கை முறையில் இலகுவாக நீக்குவது எப்படி?
உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.
இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.
Read more »
ஆரோக்கியம் தரும் மூலிகை குடிநீர்
ஆவாரம்பூ குடிநீர்:-
நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.
இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
Read more »
அடிக்கடி ஏப்பம் வருவதை தடுக்கும் வழிமுறைகள்
உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.
Read more »
Monday, 2 June 2014
அலுவலகத்தில் ஏற்படும் சோர்வை போக்குவதற்கான 10 எளிய வழிகள்!!!
வேலைக்கு செல்லும் அனைவருமே விரும்பி காத்திருப்பது விடுமுறை நாட்களுக்காகத் தான். ஏன்னெனில், அன்று மட்டும் தான் எந்தவித பொறுப்புகளும் மன அழுத்தங்களும் இல்லாமல் ஓய்வாக இருக்கலாம். வேலையில் இருக்கும் மன அழுத்தங்களும் பொறுப்புகளும் அவர்களை பெரிதும் சோர்வடையச் செய்கின்றது. இந்த சோர்வை போக்கி நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது உங்கள் கைகளில் தான் இருக்கின்றது.
Read more »
உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்
உண்ணும் உணவை முற்றிலும் குறைப்பதன் மூலமோ அல்லது எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலமோ உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க முடியாது. உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க வேண்டுமானால், நல்ல சரியான உணவுகளை சரியான அளவில் உட்கொண்டு வர வேண்டும். அதிலும் கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
Read more »
இசையை கேட்பதால் மனம் மகிழ்வடைய காரணம் என்ன?
அனேகமாக எல்லோருக்குமே இசை பிடிக்கும். இசை கேட்பது, சந்தோஷமளிப்பதற்குக் காரணம் என்ன? அந்த நேரத்தில், மூளையில் ஒரு வேதிப்பொருள் சுரக்கப்படுகிறது. அதுதான் இசை ரசிகரின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பரப்புகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
Read more »
வெள்ளரிக்காயை அவசியம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்!!!
பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கக்கூடிய காய்கறிகள் சில வகைகள் தான் உள்ளது. அவைகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். பொதுவாக வெள்ளரிக்காய் பிடிக்காதவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க முடியும். உலகத்தில் அதிகமாக விளையக் கூடிய காய்கறியில் வெள்ளரிக்காய் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக நிற்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
Read more »
Sunday, 1 June 2014
உடம்புக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியம் என்பதற்கான காரணங்கள்
வைட்டமின் டி என்பது உணவில் காணப்படும் ஒரு ஊட்டச்சத்து மட்டுமன்று; அது நம் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோனும் கூட. உலகளவில் சுமார் 1 பில்லியன் மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்த குறைபாடு அனைத்து வயதினரிடையேயும், அனைத்து இனத்தினரிடையேயும் பரவலாகக் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
Read more »
Subscribe to:
Posts (Atom)