Showing posts with label வீட்டு வைத்தியம். Show all posts
Showing posts with label வீட்டு வைத்தியம். Show all posts

Thursday, 4 December 2014

சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை

  


சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:  

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ''சுக்கு''. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ''சுக்கு''.
Read more »

Friday, 28 November 2014

எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்

எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்


• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
Read more »

Sunday, 26 October 2014

எளிய வைத்தியக் குறிப்புகள்

வைத்தியக் குறிப்புகள்


எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:

* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.

* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
Read more »

Wednesday, 15 October 2014

எளிய முறையிலான சித்த மருத்துவ குறிப்புகள்


நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.

கல்லீரல் பலப்பட ... தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

ரத்த அழுத்தம் சரியாக.... டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்திற்கு பலம் கிடைக்க: மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
Read more »

Friday, 8 August 2014

சித்த மருத்துவ குறிப்புகள் 1


சித்த மருத்துவ குறிப்புகள்

1. மாம்பழம்:

முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்:

தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3. முகம் வழுவழுப்பாக இருக்க:

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

4. இரத்த சோகையை போக்க:

பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

7. உடல் சக்தி பெற:

இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8. வெட்டுக்காயம் குணமாக:

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. சுகப்பிரவசமாக:

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

10. உடல் அரிப்பு குணம் பெற:

வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11. காதில் சீழ்வடிதல் குணமாக:

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12. நெஞ்சுவலி குணமாக:

அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

13. சிலந்தி கடிக்கு மருந்து:

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14. சீதபேதி குணமாக:

புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15. வயிற்று நோய் குணமாக:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

16. காது வலி குணமாக:

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17. நுரையீரல் குணமாக:

நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

18. பேதி குணமாக:

மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

19. வாதநோய் குணமாக:

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

20. மலச்சிக்கல் சரியாக:

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

21. மேகரோகம் குணமாக:

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

22. நீரழிவு நோய் குணமாக:

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

23. இரத்த பேதியை குணப்படுத்த:

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24. மூட்டுவலி குணமாக:

அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

25. நரம்பு தளர்ச்சி நீங்க:

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26. பற்கள் உறுதியாக இருக்க:

மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27. சேற்றுபுண் குணமாக:

சிலரு‌‌க்கு மழை‌க்கால‌த்‌திலு‌ம், பலரு‌க்கு எ‌ப்போதுமே கா‌லி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது. எ‌ப்போது‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌‌நி‌ன்று கொ‌ண்டு வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது.

அதாவது விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, சேற்றுப் புண்களில் தடவ ‌‌விரை‌வி‌ல் குணம் கிடைக்கும்.

காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.
சே‌ற்று‌ப் பு‌ண்ணை‌த் த‌வி‌ர்‌க்க மருதா‌ணி ந‌ல்ல மரு‌ந்தாக உதவு‌கிறது. மருதா‌ணி இலையுட‌ன் ம‌ஞ்சளை சே‌ர்‌த்து அரை‌த்து இர‌வி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் உ‌ள்ள இட‌ங்க‌‌ளி‌ல் ப‌ற்று‌ப் போ‌ல் போ‌ட்டு ‌விடு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் லேசாக‌த் த‌ட‌வி‌க் கொ‌ண்டா‌ல் போது‌ம்.

ஏனெ‌னி‌ல் மருதா‌ணி உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம். காலை‌யி‌ல் எழு‌ந்து த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு கழு‌வி ‌விடவு‌ம். இ‌வ்வாறு மூ‌ன்று நா‌ட்க‌ள் செ‌ய்து வ‌ந்தா‌ல் சே‌ற்று‌ப்பு‌ண் குணமா‌கி‌விடு‌ம். மேலு‌ம் சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், த‌ண்‌ணீ‌ரி‌‌ல் ‌நி‌ன்று வேலை செ‌ய்யு‌ம் போது கா‌லி‌ல் ‌சி‌றிது தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌த் தட‌வி‌க் கொ‌ள்ளவு‌ம்.இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் ‌நிர‌ந்தரமாக சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.

28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29. வயிற்றுவலி குணமாக:

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30. வயிற்று பூச்சிகள் ஒழிய:

வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

31. மலச்சிக்கல் தீர:

பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய:

நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33. இரத்தத்தை சுத்தப்படுத்த:

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

Tuesday, 20 May 2014

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்



1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.

Read more »

Sunday, 18 May 2014

இரத்தத்தை சுத்தபடுத்த சில இயற்கை வைத்திய முறைகள்



உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதுஅவசியமாகும்.

Read more »

Saturday, 17 May 2014

இருமலை போக்க சில வீட்டுவைத்திய முறைகள்



இருமலுக்கு இயற்கை வைத்தியம்:

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை
Read more »

Monday, 14 April 2014

தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்



தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்

ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவுடன் தேனை சேர்த்து உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். அடிக்கடி நினைவு மறதி ஏற்படுபவர் அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வதை வழக்க மாக்கிக் கொண்டால் நினைவு மறதி சிறிது சிறிதாக மாறிவிடும். நினைவாற்றல் கூடும்.

Read more »

Saturday, 5 April 2014

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க



எண்ணெய் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? அக்னி வெயில் உங்கள் எண்ணெய் பசைசைய மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில டிப்ஸ்...

Read more »

Thursday, 3 April 2014

கருவளையம் போக்க எளிய வழிகள்


இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

Read more »

வீட்டு வைத்திய குறிப்புகள் 3


61. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

62. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

Read more »

கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவும்


 பொதுவான குணம் 

கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். தமிழகத்தில் எல்லாமாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் வளர்கிறது.

Read more »

வீட்டு வைத்திய குறிப்புகள் 2


31. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

32. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

Read more »

Friday, 28 March 2014

வீட்டு வைத்திய குறிப்புகள் 1



1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

Read more »

Sunday, 23 March 2014

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்





*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

Read more »

Saturday, 22 March 2014

ஆரோக்கிய வாழ்வுக்கு



நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது.

Read more »

Friday, 21 March 2014

வாய் புண் குணமாக



தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

Read more »

Thursday, 20 March 2014

பிரண்டை - இயற்கை வைத்தியம்



வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான் என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடராய் அலைகின்றோம்.

Read more »

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!



உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....
Read more »