Friday, 19 December 2014
சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
‘மாஸ்டர் 3 டீ, அதுல ரெண்டு சக்கரை இல்லாம....’இன்று டீக்கடைகளில் அடிக்கடி இப்படி கேட்கலாம். ஒரு காலத்தில் ‘பணக்காரர்களின் வியாதி’ என்று சொல்லப்பட்ட சர்க்கரை நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. 40 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே வந்த சர்க்கரை நோய், இன்று 20 வயதில் உள்ளவர்களையும் எளிதில் பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. அதற்குக் காரணம், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான்.
Read more »
Monday, 8 December 2014
இரத்த சோகைக்கு தீர்வு என்ன?
எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா?
சோம்பலாக இருக்கிறீர்களா?
காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டே இருக்கிறீர்களா?
உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள்.
ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்த்த்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச்சத்து இருக்கும். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.
Read more »
Sunday, 7 December 2014
வயதானவர்களைத் தாக்கும் குளிர்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்
குளிர்காலத்தில் நோய் இவர்களை எளிதில் பற்றிக் கொள்கிறது. மார்புச்சளி, இருமல், இருதய வியாதி, நரம்புத் தளர்ச்சி, தோலில் ஏற்படும் புண்கள், மூட்டு வலிகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகிய பிணிகள் குளிர்காலத்தில் தலைவிரித்து ஆடுகின்றன.
Read more »
Saturday, 6 December 2014
குளிர்காலத்திற்கு ஏற்ற சில அடிப்படை சரும பராமரிப்பு குறிப்புகள்!!!
அனைவருக்கும் பிடித்த காலம் குளிர்காலமாக இருக்கலாம். ஆனால் இந்த குளிர்காலத்தில் தான் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதில் முதன்மையானது சரும வறட்சி, சரும வெடிப்புகள் போன்றவை. இதனால் குளிர்காலத்தில் சருமத்தின் அழகே சற்று பாழாகக்கூடும். ஆனால் முறையான சரும பராமரிப்பை குளிர்காலத்தில் பின்பற்றி வந்தால், சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்.
Read more »
Friday, 5 December 2014
வறட்டு இருமல், நெஞ்சு சளி குணமாக குறிப்புகள்
வறட்டு இருமலை விரட்டி அடிக்கும் மஞ்சள்தூள்!
குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லனா... தாய்மார் துடிதுடிச்சுப்போயிருவாங்க. அப்படிப்பட்டவங்கள்லாம், இந்தப் பாட்டி சொல்ற வைத்தியத்தைக் கேட்டு நடந்தா... பதறித் துடிக்கறதுக்கு அவசியமே இருக்காது... சந்தோஷத் துள்ளல் மட்டும்தான் இருக்கும்.
Read more »
தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?
தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது மோர் மற்றும் தயிர். தயிர் உடலுக்குச் சூடு என்பார்கள். அதே தயிரை நீர் மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி. இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்குகிறார் திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷீலா.
Read more »
Thursday, 4 December 2014
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை
சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ''சுக்கு''. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ''சுக்கு''.
Read more »
Wednesday, 3 December 2014
சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகள் அவசியம் படிக்கவும்
டயாபடீஸ் என்பது ஒரு டைம் பாம். அது இன்றோ, நாளையோ, அடுத்த ஆண்டோ, இன்னும் பத்தாண்டுகளிலோ, என்னையும் உங்களையும் - ஏன் இந்தக் குழந்தைகள் உள்பட - பல லட்சக்கணக்கானோரைத் தாக்கக்கூடும். - மேரி டைலர் மூர் (அமெரிக்க நடிகை)
Read more »
Friday, 28 November 2014
எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
Read more »
Thursday, 27 November 2014
வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்
இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களைகுழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள்.
Read more »
Wednesday, 26 November 2014
புரை ஏறுவது எதனால்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை.
தொண்டையின் மையப் பகுதியில் இந்த இரண்டு பாதைகளும் சேரும் இடத்தில் குரல்வளை (Larynx) உள்ளது. இது மூச்சுக் குழாயின் தொடக்கம். மூச்சுக் குழாய்க்குப் பின்புறம் உணவுக் குழாய் உள்ளது. குரல்வளையின் மேல் துவாரத்துக்கு ‘கிளாட்டிஸ்’ (Glottis) என்று பெயர். அதை மூடியிருக்கும் தசை ‘எபிகிளாட்டிஸ்’ (Epiglottis).
Read more »
Monday, 17 November 2014
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா?
பெரும்பாலான மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு, உடலில் உள்ள சில பிரச்சனைகளே காரணமாகும்.
சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
ஆனால் சாதாரணமானவர்களுக்கு, இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதிலும் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தால், அத்தகையவர்களின் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம்.
Read more »
சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
ஆனால் சாதாரணமானவர்களுக்கு, இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதிலும் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தால், அத்தகையவர்களின் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம்.
Read more »
Sunday, 16 November 2014
குழந்தைகள் எடை குறைவாக அதிகமாக பிறப்பது ஏன்?
சிசேரியனா? சுகப்பிரசவமா?ஆணா? பெண்ணா? இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, ‘குழந்தையோட வெயிட் என்ன?’ என்ற கேள்வியையும் எதிர்கொள்வார்கள் அம்மாக்கள். முதல் இரண்டு கேள்விகளைப் போலவே மூன்றாவதும் அத்தனை முக்கியமானது! சராசரிக்கும் குறைவான எடை... சராசரியைவிட அதிகமான எடை... இவை இரண்டுமே பிரச்னைக்குரியவைதான். குறைவான எடையுடன் குழந்தைகள் பிறக்கும்போது கவலை கொள்கிற பலரும், சராசரியைவிட அதிக எடையுடன் பிறக்கும்போது அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. ‘குண்டுக் குழந்தைதான் ஆரோக்கியமானது’ எனக் காலங்காலமாக மக்கள் மனதில் ஊறிப் போன தவறான கருத்தே காரணம்!
Read more »
Saturday, 15 November 2014
பிரசவத்துக்குப் பிறகு உடல் குண்டாவது ஏன்? அதை தவிர்ப்பது எப்படி?
குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது குறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் அவர்கள்:
'தன்னுடைய சராசரி எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.
Read more »
Friday, 14 November 2014
தும்மல் ஏன் வருகிறது? எவ்வாறு தடுப்பது?
தும்மல் என்பது ஒரு நோயல்ல. அது இறைவன் நமக்களித்த ஒரு அருட்கொடை. ஒரு பென்சிலைக் கொண்டு நம் கையை ஒருவர் குத்த வரும்போது குத்த வருகிறார்... கையை எடு என்று கட்டளையிடுகிறது நம் மூளை. அதுபோலத்தான் அந்நியப் பொருட்கள் அதாவது, நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள், நமது உடலுக்குள் குறிப்பாக, மூக்கின் வழி செல்கையில், அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளை, அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.
Read more »
Thursday, 13 November 2014
கஷாயம் இருக்க!.....காஃப் சிரப் எதற்கு
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.
Read more »
சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்
தொண்டை எரிச்சல்
எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.
பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.
Read more »
Wednesday, 12 November 2014
உங்க தலைமுடி அதிகமா உதிர்கிறதா?
பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.
ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும்.
Read more »
Wednesday, 29 October 2014
சாப்பிட்டவுடனேயே இதெல்லாம் செய்யாதிங்க
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
Read more »
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அவ்வுடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். எனவே, சிறுநீரகத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான நோய்களையும் தவிர்க்கலாம். முதுகெலும்புக்குக் கீழ்ப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரு அவரை விதைகளைப் போல் இருக்கும் உறுப்புதான் சிறுநீரகம். நாம் அனைவரும் இரு சிறுநீரகங்களோடு பிறந்தாலும், நாம் உயிர் வாழ ஒரு கிட்னி இருந்தாலே போதுமானதாகும்.
Read more »
Tuesday, 28 October 2014
கர்ப்பப்பை இறக்கம் அறிகுறிகள்
தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கர்ப்பப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...
• இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.
• ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.
Read more »
Sunday, 26 October 2014
ரத்தக் கொதிப்பைத் தவிர்க்கும் உணவு வகைகள்!
முருங்கைக் கீரையை நீர் நிறைய விட்டு வேகவைத்து, பூண்டு, சிறிய வெங்காயம், வெந்தயம் போட்டு சாதாரணமாக ரசம் செய்வதுபோல செய்து, காலை உணவுடன் பருகலாம்.
மதிய உணவில் சமைக்காத சிறிய வெங்காயத் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி, வெள்ளரிப் பச்சடி சேர்த்துக்கொள்ளலாம்.
Read more »
பெப்டிக் அல்சர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
நேரத்துக்கு சரியா சாப்பிட மாட்டேன். அதுதான் அல்சர் வந்திடுச்சு’ இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகக் கேட்கும் புலம்பல் இது. அல்சர் பற்றி கொஞ்சம் அலசு வோமா? உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதி உட்சுவரில் தோன்றும் புண்களை ‘குடல் புண்’ என்கிறோம். வயிற்று வலிதான் இதன் பொதுவான அறிகுறி.
Read more »
எளிய வைத்தியக் குறிப்புகள்
எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:
* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
Read more »
Saturday, 25 October 2014
தொண்டை கட்டி பேச முடியவில்லையா?
• சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
• அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
Read more »
உடல் வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வியர்ப்பது என்பது ஒரு இயற்கையான நிகழ்வே. எப்போது மிகவும் கடினமாக வேலை செய்கிறோமோ, அப்போது உடலானது அதிக அளவில் வெப்பமடைந்து, உடலில் இருந்து வியர்வையானது வெளியேறும். இதற்கு முக்கிய காரணம், மூளையில் உள்ள ஹைபோதலாமஸ். எப்படியெனில் உடலானது அதிக அளவில் வெப்பமடையும் போது, மூளையில் உள்ள ஹைபோதலாமஸ் உடலுக்கு ஒருவித தகவலை அனுப்பும். இதனால் தான் உடலை குளிர்விக்க வியர்வையானது வெளியேறுகிறது.
Read more »
Thursday, 23 October 2014
மாதவிடாய் தாமதமாக காரணங்கள்
பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி காலஅளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது.
Read more »
Wednesday, 22 October 2014
வாயு தொல்லையால் தர்ம சங்கடமா ?
‘கொலை செஞ்சாக்கூட ஒத்துக்குடுவாய்ங்கெ. -- விட்டா ஒத்துக்கிட மாட்டாய்ங்கெ...’ - இது தென் தமிழக கிராமங்களில் பிரபலமான பழமொழி.
வீட்டில் ஏதோ விசேஷம்... உறவினர்களும் நண்பர்களும் நிரம்பிய தருணம்... ‘அப்பா பாம் போட்டுட்டாரு!’ என்று ஏதோ ஒரு வாண்டு கிளப்பிவிட, குறும்புச் சிரிப்பு அலையென அறையெங்கும் எழும்பும்... சம்பந்தப்பட்டவரோ குறுகி நிற்பார்.
தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்ல... பிரபல ஹாலிவுட் படங்களிலேயே கூட ‘வாயுத் தொல்லை’ கண்ணுக்குத் தெரியாத கதாபாத்திரமாக வலம் வந்து கலகலப்பையோ முகச்சுளிப்பையோ ஏற்படுத்தியிருக்கிறது.
Read more »
Sunday, 19 October 2014
இருமல் சளி காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்
சளி,கபம், நெஞ்சு சளி, குணமாக
வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும்
தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும்.
கருந்துளசியை பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட சளி – கபம், மார்பு சளி குணமாகும்.
ஆடாதோடா இலையை போடி செய்து தேன்கலந்து தினமும் சாப்பிட்டு வர, இருமல் சளி நிற்கும்
Read more »
Friday, 17 October 2014
இளநரையை போக்க பல எளிய வழிகள்
இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.
முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.
Read more »
கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்வது சரியா தவறா?
வயிற்றில் வளரும் தங்களது குழந்தையை ஸ்கேன் செய்து பார்ப்பதிலும் பலரும் ஆவலாக இருக்கின்றார்கள். இதில் முக்கியமான விஷயம் ஸ்கேன் செய்வது நல்லதா கெட்டதா என்ற குழப்பம் நிகழுகிறது. இது இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் இருக்கும் பெரியதொரு கேள்வியாக அமைந்து விடுகின்றது.
பெரும்பாலான தம்பதிகளுக்கு ஸ்கேன் செய்து பார்ப்பதால் குழந்தைக்கோ அல்லது தாயிக்கோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? ஒரு தடவை ஸ்கேன் செய்து விட்டால் அதன் பின்னர் வைத்தியரை சந்திக்கச் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டுமா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றது.
Read more »
Thursday, 16 October 2014
பசியின்மையும் அதை போக்கும் வழிமுறைகளும்
ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…
* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.
Read more »
Wednesday, 15 October 2014
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் உணவுகள்!!!
நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இயற்கையாகவே பலவீனமடைகிறதா அல்லது ஏதேனும் சில வழியில் அப்படி நடக்கிறதா? பல நேரங்களில், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு இருப்பது இயற்கையே. சிலர் தங்களின் சிறு வயது முதலே பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை கொண்டுள்ளதாக கூறுவார்கள். ஆனால் சிலருக்கோ அவர்கள் உண்ணும் உணவுகள் மற்றும் வாழும் சுற்றுச் சூழலால் இது ஏற்படுகிறது. ஆம், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு சுற்றுச்சூழல் முக்கிய காரணமாக விளங்குகிறது. அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பாதிக்கக்கூடும். அதே போல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை முழுமையாக அழிக்கும் உணவுகளும் கூட இருக்கிறது.
Read more »
எளிய முறையிலான சித்த மருத்துவ குறிப்புகள்
நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.
கல்லீரல் பலப்பட ... தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.
ரத்த அழுத்தம் சரியாக.... டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.
இதயத்திற்கு பலம் கிடைக்க: மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
Read more »
Tuesday, 14 October 2014
நீண்ட நேரம் மேக்கப் கலையாதிருக்க சில டிப்ஸ்
சில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை அழகாக வெளிபடுத்துவது என்பது சிறப்பான ஒன்று. மிக முக்கியமான பரபரப்பான ஒரு நாளில் மங்கிய தோற்றத்தோடு நீங்கள் வெளிப்படுவது என்பது சிறந்தது அல்ல.
மங்கிய தோற்றத்திலிருந்து உங்களைக் காத்து கொள்ளவும், உங்கள் மேக்-அப் நீடித்து நிலைக்கவும், உங்களுக்கு சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.
Read more »
பேரிச்சம் பழத்தில் தீமைகளும் உண்டு தெரியுமா?
பேரிச்சம் பழம் எண்ணற்ற நன்மைகளை கொண்டிருந்தாலும், அதில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
குளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது, எனவே டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.
கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை சொத்தையாகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, மேலும் சில நேரங்களில் உடல் எடையை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது.
Read more »
ஆரோக்கியமான நுரையீரலுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
தற்போது அதிகரித்துவரும் சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஆரோக்கியம் குறித்த விவாதங்களில் நுரையீரல் நலன் தற்போது முக்கிய இடத்தை வகிக்கிறது. நீங்கள் புகை பிடிக்காதவர் என்றாலும், பல்வேறு காரணிகளால் காற்று மாசுபாட்டில் ஏற்பட்டுள்ள பன்மடங்கு உயர்வு, மிகக் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு வித்திட்டு நுரையீரலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
Read more »
Monday, 13 October 2014
சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!!
சென்ஸிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது.
அதுவும், பெண்களுக்கு சென்ஸிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக் கொள்ள நினைக்கும்போது, மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் கண்களுக்கு சரியாக மேக்கப் செய்யவில்லையென்றால், கண்களில் எரிச்சல் ஏற்படும்; கண்கள் கலங்கும்; பலருக்குக் கண்கள் சிவந்து விடும்.
சென்ஸிட்டிவ்வான கண்களுடைய பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில எளிய மேக்கப் டிப்ஸ்கள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.
Read more »
Sunday, 12 October 2014
காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?
காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடித்தால் தான் பலருக்கும் பொழுதே விடுகிறது.
ஆனால் இது ஆரோக்கியமானது தானா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.
நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.
இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.
Read more »
நெய் ஆரோக்கியமானது தானா?
நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும்.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப நெய்யை அளவோடு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமானது தான்.
ஏனெனில் சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவிகிதம் குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
Read more »
Saturday, 11 October 2014
இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா?
இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது உங்களுக்கு தெரியுமா?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பானம் இளநீர், வெப்பத்தை தணிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
Read more »
மழைக் காலத்தில் சருமத்தையும், கேசத்தையும் பாதுகாப்பது எப்படி?
கோடைக் காலத்தில் என்ன தான் பல லோஷன்களையும், க்ரீம்களையும் தடவிக் கொண்டு உங்கள் சருமத்தையும் முடியையும் நீங்கள் பாதுகாத்துக் கொண்டாலும், மழைக் காலத்தில் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.
Read more »
Friday, 10 October 2014
முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையை நீக்க சில டிப்ஸ்...
உடலில் பலருக்கு கருமையாக இருக்கும் பகுதி என்றால் அது முழங்கை மற்றும் முழங்கால் தான். ஏனெனில் பள்ளி செல்லும் வயதில் அனைவரும் மிகவும் குறும்புத்தனமாக இருப்பதால், பள்ளியில் கட்டாந்தரையில் முட்டி போட்டிருப்போம். இப்படி பலமுறை முட்டி போட்டதால், முழங்கால்களில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அப்படியே தங்கி அவ்விடமானது கருமையாகவே இருக்கும். அதேப்போன்று முழங்கையை அதிகம் ஊன்றுவதாலும், வெயிலில் அதிகம் திரிவதாலும், முழங்கைகளும் கருமையாக இருக்கும்.
Read more »
உடல் எடையை குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய சில இந்திய உணவுகள்!!!
உடல் எடையை குறைக்க வேண்டுமென்று டயட்டை பின்பற்ற பல இந்தியர்களும் நினைக்கின்றனர். உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு சந்தையில் பல விதமான உடல் எடை குறைப்பு பொருட்கள் கிடைக்கவே செய்கிறது. ஆனால் கலோரிகளை வேகமாகவும் சிறந்த முறையிலும் குறைக்க வேண்டுமானால் கண்டிப்பான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
Read more »
Wednesday, 8 October 2014
புற்றுநோய்க்கு இலவச மருந்து!
அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் கேன்சரை குணப்படுத்தும் ஒன்றரை லட்சம் விலைமிகுந்த மருந்தான ‘Imatinib Mesylate’ ஐ இலவசமாக தருகிறார்கள்... அண்மையில் ஃபேஸ்புக் மற்றும் இணையதளங்களில் வேகமாகப் பரவிய செய்தி இது. இது எந்த அளவு உண்மை? அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் டாக்டர் டி.ஜி.சாகர் அவர்களை அணுகினோம்.
Read more »
Monday, 6 October 2014
மாதவிடாய் வலி குறைக்கும் மருந்துகள்
* முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.
Read more »
Wednesday, 1 October 2014
உடல் எடையைக் குறைக்கும் உணவுப் பட்டியல்
எடை ஒரேநாளில் அதிகரித்துவிடுவது இல்லை. நம்முடைய தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மருத்துவரீதியான பிரச்னை காரணமாக உடல் எடை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கிறது.
சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவை உட்கொள்வது, இரவு நேரங்களில், பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது கூடவே கூல்டிரிங்ஸ் குடிப்பது போன்றவை உடல் எடை அதிகரிக்க காரணம்.
உடல் எடையைக் குறைக்க
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், ஒரு நாளைக்கு 1,600 கலோரி உள்ள உணவையும் பெண், 1,200 கலோரி எடை உணவையும் உட்கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைப்பதன் ரகசியம், நாம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது, சரியான அளவில் உட்கொள்ளாமல் இருப்பது நம் உடலின் வளர்சிதை மாற்றங்களைப் பாதித்து உடல் நலத்துக்கு வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கான பொது விதிகள்
எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்ற உணவுக்கட்டுப்பாடு மிகமிக முக்கியம். இது உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.
அதிக அளவு கலோரி உள்ள, அதேநேரம் ஊட்டச்சத்து சிறிதும் இல்லாத கூல் டிரிங்ஸ், நொறுக்குத் தீனி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிக அளவில் கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்கு அதிக வைட்டமின், தாது உப்பு மற்றும் நார்ச் சத்துக்கள் கிடைக்கின்றன.
வயிறு நிறைந்துவிட்ட உணர்வை மூளை அடைய, குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். எனவே, அவசர அவசரமாக உணவை எடுத்துக்கொள்ளவேண்டாம். உணவு சாப்பிடும் நேரம் மிக நீண்டதாக இருக்கட்டும்.
கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டியது இல்லை. அப்படித் தவிர்ப்பதன்மூலம் அது நம் உடலில் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.
சூப், ஜூஸ், பால்… என போன்ற நீராகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு, பசி உணர்வு தோன்றாமல் பார்த்துக்கொள்ளும்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க, உடல் பருமன் குறைப்பு வல்லுனரின் ஆலோசனையைப் பெறத் தயங்காதீர்கள். ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட டயட் உணவை, மற்றவர் பின்பற்றுவது மிகவும் தவறு.
உணவாலும் உடல் இளைக்கும்!
நல்ல புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 2,000 கலோரி தேவையெனில், அதில் 500 கலோரியைக் குறைத்தாலே போதும். மாதம் இரண்டு கிலோ எடை குறைந்துவிடும்’ என்றவர் ஒருநாள் உணவை பட்டியலிடுகிறார்.
ஒரு நாள் உணவு!
காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
அரை மணி நேர நடைப்பயிற்சி.
வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்)
புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)
10 மணிக்கு மோர்
11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்
12 மணிக்கு இளநீர்
மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.
வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)
200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை.
நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும்.
நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.
ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.
காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.
இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.
தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.
டயட் பற்றிய டவுட்!
பட்டினி கிடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது தவறான கருத்து.
எடை குறைக்க விரும்புபவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைக்கவேண்டும். பழங்கள், காய்கறிகளைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.
நீராகாரமாக மட்டும் சாப்பிட்டால் வயிற்றின் உட்புறச் சுவர்கள் பாதிக்கப்படும். இதனால் அல்சர் வரும் வாய்ப்புகள் அதிகம். திட மற்றும் திரவ உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலமே மலச்சிக்கல் வராமல் இருக்கும்.
கோஸ் சூப்
செய்முறை: 200 கிராம் கோஸை பொடியாக நறுக்கி, நீர் விட்டுக் கொதிக்கவைக்கவும். காரட், பீன்ஸ், வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, இவற்றை அரைத்து விழுதாக்கி, மஞ்சள்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து இறக்கி, சுடச்சுட பருகவும்.
மதியம் சாப்பிட வெஜிடபிள் அவல் மிக்ஸ் சாதம்!
செய்முறை: அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயத்தை, தக்காளி, கோஸ், குடமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கி வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஊறிய அவலைப் போட்டு, உப்பு சேர்த்து எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கிளறி இறக்கவும்.
வாழைத்தண்டு பச்சடி
செய்முறை: வாழைத்தண்டைக் கழுவி, பொடியாக நறுக்கி, தண்ணீர்விட்டு லேசாக வேக வைக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு டம்ளர் மோர், இந்துப்பு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.
Tuesday, 30 September 2014
மூல நோய்கள் நீங்க - பாட்டி வைத்தியம்:-
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, இரத்த மூலம் போன்றவை சரியாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.
Read more »
Monday, 29 September 2014
உணவு உண்ணும் முறையினை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
சர்க்கரை வியாதி உடையவர்கள் வயிறு நிறையும் அளவில் உண்ணாமல் மூன்று வேளை உணவை நான்கு அல்லது ஐந்து வேளைகளில் உண்ணலாம். தினமும் குறித்த நேரத்தில் உண்ணவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் உண்ணக்கூடாது.உண்ணும்போது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், படித்துக் கொண்டும் உண்ணக்கூடாது.
Read more »
வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்
அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.
Read more »
Subscribe to:
Posts (Atom)