Friday, 28 November 2014
எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
Read more »
Thursday, 27 November 2014
வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்
இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களைகுழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள்.
Read more »
Wednesday, 26 November 2014
புரை ஏறுவது எதனால்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை.
தொண்டையின் மையப் பகுதியில் இந்த இரண்டு பாதைகளும் சேரும் இடத்தில் குரல்வளை (Larynx) உள்ளது. இது மூச்சுக் குழாயின் தொடக்கம். மூச்சுக் குழாய்க்குப் பின்புறம் உணவுக் குழாய் உள்ளது. குரல்வளையின் மேல் துவாரத்துக்கு ‘கிளாட்டிஸ்’ (Glottis) என்று பெயர். அதை மூடியிருக்கும் தசை ‘எபிகிளாட்டிஸ்’ (Epiglottis).
Read more »
Monday, 17 November 2014
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளவரா?
பெரும்பாலான மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு, உடலில் உள்ள சில பிரச்சனைகளே காரணமாகும்.
சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
ஆனால் சாதாரணமானவர்களுக்கு, இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதிலும் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தால், அத்தகையவர்களின் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம்.
Read more »
சிலருக்கு பிறக்கும் போதே சிறுநீர்ப்பையானது சிறிதாக இருக்கும். அதனால் அத்தகையவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.
ஆனால் சாதாரணமானவர்களுக்கு, இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதிலும் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு முறை சிறுநீர் கழித்தால், அத்தகையவர்களின் உடலில் பிரச்சனைகள் இருக்கிறது என்று அர்த்தம்.
Read more »
Sunday, 16 November 2014
குழந்தைகள் எடை குறைவாக அதிகமாக பிறப்பது ஏன்?
சிசேரியனா? சுகப்பிரசவமா?ஆணா? பெண்ணா? இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, ‘குழந்தையோட வெயிட் என்ன?’ என்ற கேள்வியையும் எதிர்கொள்வார்கள் அம்மாக்கள். முதல் இரண்டு கேள்விகளைப் போலவே மூன்றாவதும் அத்தனை முக்கியமானது! சராசரிக்கும் குறைவான எடை... சராசரியைவிட அதிகமான எடை... இவை இரண்டுமே பிரச்னைக்குரியவைதான். குறைவான எடையுடன் குழந்தைகள் பிறக்கும்போது கவலை கொள்கிற பலரும், சராசரியைவிட அதிக எடையுடன் பிறக்கும்போது அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. ‘குண்டுக் குழந்தைதான் ஆரோக்கியமானது’ எனக் காலங்காலமாக மக்கள் மனதில் ஊறிப் போன தவறான கருத்தே காரணம்!
Read more »
Saturday, 15 November 2014
பிரசவத்துக்குப் பிறகு உடல் குண்டாவது ஏன்? அதை தவிர்ப்பது எப்படி?
குழந்தைப் பேறுக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது குறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் அவர்கள்:
'தன்னுடைய சராசரி எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.
Read more »
Friday, 14 November 2014
தும்மல் ஏன் வருகிறது? எவ்வாறு தடுப்பது?
தும்மல் என்பது ஒரு நோயல்ல. அது இறைவன் நமக்களித்த ஒரு அருட்கொடை. ஒரு பென்சிலைக் கொண்டு நம் கையை ஒருவர் குத்த வரும்போது குத்த வருகிறார்... கையை எடு என்று கட்டளையிடுகிறது நம் மூளை. அதுபோலத்தான் அந்நியப் பொருட்கள் அதாவது, நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்கள், நமது உடலுக்குள் குறிப்பாக, மூக்கின் வழி செல்கையில், அதை உடனே உணர்ந்து சுதாரிக்கும் மூளை, அந்த அந்நிய வஸ்துவை வெளியேற்ற தும்மலை பிரசவிக்கிறது. இந்தத் தும்மலானது ஓரிரு முறை வந்தால் எந்தப் பிரச்னையுமில்லை. மாறாக அளவு கடக்கும்போதுதான் ஆபத்து உண்டாகிறது.
Read more »
Thursday, 13 November 2014
கஷாயம் இருக்க!.....காஃப் சிரப் எதற்கு
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.
Read more »
சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம்
தொண்டை எரிச்சல்
எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.
பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.
Read more »
Wednesday, 12 November 2014
உங்க தலைமுடி அதிகமா உதிர்கிறதா?
பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.
ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும்.
Read more »
Subscribe to:
Posts (Atom)