Monday, 31 March 2014

வெயிலால் கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய



சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கத்திர்களின் தாக்கத்தினால், சருமத்தின் நிறமானது மாறிவிடுகிறது. அதிலும் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், சூரிய தாக்கத்தினால், சருமமானது கருமையாகிவிடுகிறது. ஆனால் சரியான சரும பராமரிப்பை மேற்கொண்டு வந்தால், சூரியக்கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.

Read more »

முகப்பரு போக்க வழிமுறைகள்



தற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான்.
Read more »

Sunday, 30 March 2014

டெட்டனஸ்(dd) இஞ்சக்ஸன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்



உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும் உடனே ஓடி போய் ஏதாவது ஒரு டிடி ஊசி போடுவோம்.

இந்த ஊசி எதற்கு, இது எத்தனை வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேன்டும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது.

Read more »

Saturday, 29 March 2014

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்?



சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள். “மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more »

Friday, 28 March 2014

வீட்டு வைத்திய குறிப்புகள் 1



1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

Read more »

சர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிக்க டிப்ஸ்



கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் கஷ்டம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப் போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ மூட்டைக்கட்ட முடியாது. அப்படியே போனாலும் ஒரு சில நாட்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... சர்க்கரை நோயாளிகளும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்

Read more »

சிறுநீர்ப் பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம்



புற்றுநோயைக் கண்டறிய தற்போது கொஞ்சம் சிக்கலான, பெரிய பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில், ஒருவரின் சிறுநீரைக் கொண்டு அவருக்கு புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Read more »

Thursday, 27 March 2014

உடல் எடையை குறைப்பது எப்படி?



கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

Read more »

Wednesday, 26 March 2014

நீங்கள் கம்ப்யூட்டர் முன் வெகு நேரம் அமர்பவரா?



நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

Read more »

தொப்பை குறைய எளிய பயிற்சி..!


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.
Read more »

Tuesday, 25 March 2014

இரத்த அழுத்தம் - போக்க உதவும் மூன்று



ரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைத்துக்கொள்ளுதல், உடலில் உள்ள பாகங்களில் பரவி நிற்கும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது. இதயத்துக்கான ரத்தத்தை அனுப்பும் ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும் போது அது மாரடைப்பாகிறது.

Read more »

Monday, 24 March 2014

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்




மா இலை, அத்தி இலை ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு

Read more »

சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை …!



சர்க்கரை நோயாளிகளே! உங்கள் கால்கள் மீது கவனம் தேவை …!
1.பாதத்தின் அடியில் புண்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை ஆரா யுங்கள்.உங்களால் அடிபாகத்தை பார்க்க முடிய வில்லை என்றால் கண்ணாடியை யோ, மற்றவர்களை பார்க்கச் சொல்லியோ பாருங்கள்.

Read more »

Sunday, 23 March 2014

கோடையில் வரும் நோய்களில் இருந்து தப்பிக்க



கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

Read more »

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்





*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

Read more »

Saturday, 22 March 2014

கோடைகாலத்தில் ஆரோக்கியமாக இருக்க



கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும். ஆகவே இக்காலத்தில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். 

Read more »

சிறு தலைவலிக்கு கூட மாத்திரை சாப்பிடுபவரா?



நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்கு கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு!


தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
*

Read more »

ஆரோக்கிய வாழ்வுக்கு



நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது.

Read more »

சர்க்கரை நோய் மருந்துகள் முழு பலன் தருகிறதா?



இந்தியாவில் சர்க்கரை நோய் பல மடங்கு பெருகி வரும் நிலையில், சிகிச்சை முறைகள் பல வகையில் புற்றீசல் போல பெருகி வருகின்றன. ஆங்கில மருத்துவ முறையிலேயே பல வகை மருந்துகள் பயன்படுத்தப்பட்டாலும், எல்லா மருந்துகளும் ஒரே மாதிரி பயன் தருகிறதா என்பதும் கேள்விக்குறி தான்.

Read more »

Friday, 21 March 2014

வியர்வையில் குளிக்கிறீர்களா?



கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை.

Read more »

வெண்டைகாய் கொழுப்பை குறைக்கும்



வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

Read more »

கைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க?




கைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க?


கைகால் மூட்டுகளில் கருப்பாக இருக்கிறது. நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது. இதற்கு என்னதான் தீர்வு?

தீர்வு சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் விஜயலட்சுமி ராஜன்...

Read more »

வாய் புண் குணமாக



தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

Read more »

Thursday, 20 March 2014

மாரடைப்பு வந்தால், அறுவைச் சிகிச்சை செய்வது தான் தீர்வா?



மாரடைப்பு வந்து விட்டால், அறுவைச் சிகிச்சை தான் தீர்வு என்பது, சரியான நடைமுறை அல்ல. மருந்து, மாத்திரைகளால், 80 சதவீதம் குணப்படுத்தி விட முடியும். இதய வால்வை மாற்றினாலும், திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். வாழ்நாள் முழுவதும், மாத்திரை சாப்பிட வேண்டிய நிலையும் வராது.

Read more »

அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்...



பெற்றோரின் அக்கறையான கவனிப்பு, படிப்புக்கேற்ற வேலை என்று எளிதில் வாழ்க்கையில் முன்னேறி விடுவதால் விருப்பம்போல சாப்பிடுகிறார்கள்.


அழகாக உடை அணிந்து செல்லும் இளைய தலைமுறையினருக்கு குட்டித் தொப்பை(ஆரம்பமாவதை)யை காணமுடிகிறது.

Read more »

பிரண்டை - இயற்கை வைத்தியம்



வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான் என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடராய் அலைகின்றோம்.

Read more »

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!



உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....
Read more »

ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி?



ரத்தப் புற்றுநோயை குணப்படுத்துவது எப்படி? இதற்கான சிகிச்சையை, எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும்?

ரத்தப் புற்றுநோய், எல்லா தரப்பினரையும் பாதிக்கக் கூடியது. சிறுவர்களுக்கு வரும் நோயை, கீமோதெரபி கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். பெரியவர்களுக்கு, (20 முதல், 50 வயது வரையுள்ளோர்) புற்றுநோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபி அல்லது எலும்பு மஜ்ஜை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

Read more »

முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக…



தலைமுடி பிரச்சினைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒரு விதம்… தீர்வுகள் கைவசம்..!

முடி உதிர்வதை தடுக்க:

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

Read more »

பாகற்காய் உடல் நோயை தீர்க்கும்



பாகற்காயின் இலையும் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாகற்காய் இலையில் இருந்து எடுக்கப்படும் சாறு, பல நோய்களுக்கு அருமருந்தாகும். இந்த இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்து போட்டால் படை, சிரங்கு, அரிப்பு போன்றவை பறந்தோடி விடும்.

Read more »

Wednesday, 19 March 2014

தவறான கூந்தல் பராமரிப்பு வழுக்கையை ஏற்படுத்திவிடும்



சிகை அல்லது கூந்தல் அலங்காரம் என்பது ஒவ்வொருவரும் தினமும் மேற்கொள்ளும் இன்றிமையாத கடமைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்வதற்கு முன் வரை, முடியை பற்றி அக்கறை எடுத்து கொள்கிறோம். ஆனால் சமீப காலமாக கூந்தல உதிர்தல் என்பது பரவலாக அறியப்பட்டு வருகிறது.

Read more »

மாதுளை சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்யும்.




மாதுளம் பழத்தின் மருத்துவ பயன்கள் :

* மாதுளம் பூவை உட்கொண்டால் ரத்த வாந்தி, வயிற்றுக்கடுப்பு, ரத்த மூலம் ஆகியவை குணமாகும். உடல் வெப்பம் தணியும். மேலும், உடலுக்கு வலிமையை தரும் மாதுளம்பூ ரத்தத்தை பெருக்கவும் செய்கிறது.


Read more »

Tuesday, 18 March 2014

ஆன்டிபயாட்டிக் மாத்திரை சாப்பிடுபவரா நீங்கள் ?



தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்...

Read more »

முதுகுவலி காரணமும் தீர்வும்



நேற்று முழுவதும் ஒரே முதுகு வலி, சரியா தூங்க கூட முடியல என நம்மில் பலர் புலம்புவதை கேட்டிருப்போம். இந்த மாதிரியான முதுகு அல்லது பின்புற வலியுடன் வேலை செய்வதும் ரொம்ப கஷ்டமான செயல். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் கட்டுமானம், தொழிற்சாலை, ஓட்டுனர் மற்றும் செவிலியர் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு, இது போன்ற முதுகு வலி ஏற்படுவது இயற்கை தான். ஆனால், இது போன்ற கடுமையான உடல் உழைப்பு இல்லாமல், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கும், முதுகு வலிப் பிரச்சினை பெரும் அவஸ்தையைக் கொடுக்கிறது.


முதுகு வலி என்று நாம் பொதுவாக சொன்னாலும், தோள்பட்டை, முதுகு, முதுகின் கீழ்ப்பகுதி, பின்புறம் ஏன் கால்கள் வரை கூட வலி இருக்கலாம். எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டு இணைப்புகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொருத்தே ஒருவருக்கு முதுகு வலி வரும் வாய்ப்புக்கள் இருக்கும். இது போன்ற முதுகு வலி வருவதற்கான காரணங்கள் எவை? அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போமே..!

முதுகு வலி வருவதற்கான காரணங்கள்

1. ஒரே மாதிரியான வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்வது, தசைகளுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்தல் மற்றும் வசதி இல்லாமல் மாறுபட்ட வகையில் உடம்பை வருத்தி அமர்தல், உறங்குதல் போன்றவையும் முதுகு வலியை உண்டாக்கும்.

2. அதிக அளவு எடை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர், தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வர். இதனாலும் முது வலி ஏற்படலாம்.

3. பலவந்தமாக, வேகமாக தள்ளுவது, இழுப்பது, குனிவது, உடம்பைத் வளைப்பது போன்ற செயல்களும் முதுகுப் பகுதியில் அழுத்தம் உண்டாக்கும் செயல்களாகும்.

4. முதுகு மற்றும் பின்புற எலும்புகளுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் பணிகளைச் செய்வது எலும்புகளுக்கும், தசை நார்களுக்கும் காயம் ஏற்படுத்தலாம் அல்லது தசைச் சோர்வை ஏற்படுத்தலாம். இதனால் முதுகு வலி ஏற்படும்.

முதுகு வலியைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன?

1. உடலுக்கு வேலை கொடுப்பது ரொம்ப அவசியம். அவ்வப்போது நடைப்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை முதுகு வலி வராமல் தடுக்கும். அவரவர் உடம்பிற்கு ஏற்றார் போல உடற்பயிற்சி செய்தல் நலம்.

2. சாப்ட்வேர் மற்றும் பிற அலுவலகங்களில் பெரும்பாலும் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டி இருக்கும். அப்படி வேலையில் இருப்பவர்கள் ஒழுங்காக, நேரான முறையில், வசதியாக அமர்தல் அவசியம். வெகுநேரம் அமர்ந்து கொண்டே இருக்காமல், கொஞ்சம் எழுந்து நிற்பது, நடந்து செல்வது என உடலுக்கு அவ்வப்போது வேலை கொடுப்பது நல்லது. அதே போல, வேறு சில பணிகளில் வெகுநேரம் நிற்க வேண்டி இருக்கும். இவர்கள், அவ்வப்போது கால்களை ஸ்டூல் அல்லது கல் போன்ற பொருட்களின் மீது வைத்துக் கொள்வது எலும்புகளுக்கும், தசைகளுக்கும் நல்லது.

3. வலுவான பொருட்களைத் தூக்கும் போது, ஒழுங்கான முறையில், உடல் ஒத்துழைக்கும் வகையில் தூக்க வேண்டும். உடம்பின் இயற்கையான வளைவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அதற்கு ஏற்றார் போல், நம் பணிகளைச் செய்வது சிறப்பு.

4. அவசியமில்லாமல், தவறான முறையில் உடம்பை வளைப்பது, எசக்குபிசக்காக குனிவது, திரும்புவது போன்ற செயல்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

1. உட்காரும் தோரணை 

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி

கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.உணவு முறை:

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்: 

கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்: 

எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்: 

வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்: 

நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: 

வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்: 

எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை: 

சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

முதுகு அல்லது பின்புற வலி சாதாரணமாக ஒரு சில நாட்களில் சரி ஆகிவிடும். முதுகு வலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்றுக் கொள்வது சிறந்தது.

உயர் இரத்த அழுத்தம் - கட்டுபடுத்த வழிமுறைகள்



உயர் இரத்த அழுத்த நோய்க்கு நவீன சிகிச்சைகள் பல இருந்தாலும் ஆரோக்கிய உணவின் மூலம் சரியான அளவில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பொதுமக்களுக்குப் புரிய வைப்பதே மருத்துவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

Read more »

Monday, 17 March 2014

நாம் சாப்பிடும் மருந்து தரமானதுதானா?



அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நாமும் நடப்பதாக இருந்தால், இந்தியாவில் மருந்துகளைத் தயாரிக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் மூட வேண்டியிருக்கும்!- இப்படி அதிரடியாக சொல்லியிருப்பது யாரோ கலகக்காரர் இல்லை; போராடும் மனித உரிமை ஆர்வலரும் இல்லை; இந்தியாவில் மருந்து தயாரிப்புகளை முறைப்படுத்தும் ‘இந்திய டிரக் கன்ட்ரோலர் ஜெனரல்’ பொறுப்பில் இருக்கும் ஜி.என்.சிங்.

Read more »

Sunday, 16 March 2014

குழந்தைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம்



முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப்படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.

Read more »

முடி கொட்டுவதற்கான காரணங்கள்



அனைவருக்குமே தினமும் 50-100 முடி கொட்டிக் கொண்டு தான் இருக்கும் என்பது தெரியும். அது இயற்கையான ஒன்று. அவ்வாறு இல்லாமல், சில சமயங்களில் கொட்டும் முடியின் அளவானது 1,00,000 மேல் இருக்கும்.

Read more »

Saturday, 15 March 2014

கால் மூட்டு வலி அறிகுறிகளும் தீர்வும்



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்.
Read more »

Friday, 14 March 2014

குதிகால் வலி தீர்வுகள்



குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள் போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் இது போன்ற வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று "எக்ஸ்-ரே" எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியைப் பொறுத்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சாதாரண ஒரு அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்துவிடலாம்.
Read more »

அப்பன்டிக்ஸ் எவ்வாறு ஏற்படுகிறது?



அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.

Read more »

Thursday, 13 March 2014

ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள்

அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள்.

இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

Read more »

சுகப்பிரசவத்திற்கு மூச்சுப்பயிற்சி






கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »

Wednesday, 12 March 2014

சித்த மருத்துவ குறிப்புகள் 63



1. மாம்பழம்:

 முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
Read more »

கொள்ளு கார அடை



கொள்ளு கார அடை

கொள்ளினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொள்ளினை தினமும் உணவில் எதாவது ஒரு வகையில் சேர்த்து கொண்டால் நிச்சயம் எடை குறையும்.
Read more »

எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பின் அறிகுறி அல்ல...


சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று எல்லோருக்கும் நெஞ்சு வலி வருகிறது. மற்ற வலிகளைக் கண்டு பயப்படுகிறோமோ இல்லையோ, நெஞ்சு வலி என்றால் துடித்துப் போகிறோம். காரணம்,
Read more »

வெந்தயக்கீரை சூப்





வெந்தயக்கீரை சூப்


தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
சோள மாவு – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
வெண்ணெய் – சிறிதளவு
காய்ச்சிய பால் – 1/2 டம்ளர்
மிளகுப்பொடி, உப்பு – தேவையான அளவு
Read more »

சர்க்கரைநோயை குணமாக்குமா அக்குபஞ்சர்






முதலில் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால்தான் - அதற்கு சிகிச்சை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

நவீன மருத்துவம் சர்க்கரை நோய்க்கான அடிப்படைக் காரணம் - கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் பற்றாக்குறைதான் என்று கூறுகிறது. இவ்வளவு சுரப்பு திடீரென குறைய என்ன காரணம்?
Read more »

Tuesday, 11 March 2014

சுவையான முட்டை நூடுல்ஸ்



இன்றைய குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ, மேகி, நூடுல்ஸ் போன்றவை மிகவும் பிடிக்கும். அத்தகையவற்றில் இப்போது புரோட்டீன் அதிகம் உள்ள முட்டையை சேர்த்து, ஒரு நூடுல்ஸ் செய்து பள்ளிக்கு செல்லும் போது கொடுத்தால், குழந்தைகள் மிச்சம் வைக்காமல் காலி செய்து கொண்டு வருவார்கள். இப்போது அந்த முட்டை நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Read more »

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!



உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Read more »